அவரோடு நடிக்க மாட்டேன்...வெளியேறிய மன்சூர் அலிகான்...தர்ணா செய்த டி.ராஜேந்தர்...
தமிழ் சினிமாவில் ரஜினி , கமல், இவர்கள் வரிசையில் சத்தமே இல்லாமல் தனக்கென ஒரு பாணியில் தனக்கென ஒரு ஸ்டைலை அமைத்து கொண்டு ஏகப்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் டி.ராஜேந்திரன்.
பெண்களை தொடும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்ற கொள்கையை கொண்டவர் நடிகர் டி. ராஜேந்திரன். நடிகர் மட்டுமில்லாமல் கதை, திரைக்கதை , வசனம் ,மியூஸிக், பாடல் வரிகள், பாடலாசிரியர் என பன்முகத்திறமைகளை ஒருங்கே பெற்றவர் இவர்.
இதையும் படிங்கள் : ரஜினியுடன் கைகோர்த்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்….! என்னடா நடக்குது…? படப்பிடிப்பில் கண்ணாமூச்சி ஆடும் திரையுலகம்…
இப்படி பட்ட ஒருவருடன் நான் நடிக்க மாட்டேன் என படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான். ஒரு படத்தில் மன்சூர் ஹீரோவாக நடிக்க ஒரு சண்டை காட்சியில் கெஸ்ட் ரோலில் அவருக்கு போட்டியாக டி.ராஜேந்திரன் நடிப்பதாக தெரிவிக்க அவரும் மேக்கப் எல்லாம் போட்டு படப்பிடிப்பில் தயாராக இருக்கிறாராம்.
மன்சூர் வந்து பார்க்க இவரை பார்த்ததும் ஆச்சரியப்பட்டாராம். விசாரித்ததில் உங்களுடன் சண்டை போடுவது இவர்தான் என்று சொன்னதும் இவருடன் நான் நடிக்கவே மாட்டேன். எப்பேற்பட்ட மனிதர் இவர். இவருடன் சண்டை காட்சியில் ஈடுபட்டால் மக்களின் கைதட்டல்கள் இவருக்கு தான் போய் சேரும் என கருதி கிளம்பி விட்டாராம். ஆனால் ராஜேந்திரனோ படப்பிடிப்பு வரை வந்து இப்படி நடந்தால் என்னுடன் நடிக்க மறுத்த நடிகர் என்ற கெட்டப்பெயர் தான் எனக்கு வரும். அதனால் இந்த இடத்தை விட்டு நான் கிளம்ப மாட்டேன் என தர்ணா போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.