
Cinema News
ஆம்பள உடம்புக்காரி… நக்கலடித்தவருக்கு நச் ரிப்ளை கொடுத்த டாப்ஸி!
தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தித் திரைத்துறையில் முன்னணி நடிகையாக சிறந்து விளங்கிக்கொண்டிருக்கும் நடிகை டாப்ஸி மிகவும் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து புகழ் பெற்று வருகிறார்.
தற்போது ராஷ்மி ராக்கெட் என்கிற ஸ்போர்ட்ஸ் ட்ராமா படத்தில் நடித்து வருகிறார். ஆகர்ஷ் குரானா இயக்கியுள்ள இப்படத்தை ரோனி ஸ்க்ரூவாலா, நேஹா ஆனந்த் மற்றும் பிரஞ்சல் காந்தியா ஆகியோர் தயாரித்துள்ளனர்.
வருகிற அக்டோபர் 15ம் தேதி அன்று வெளியாகவுள்ள இப்படத்திற்காக கடுமையாக ஒர்க் அவுட் செய்த புகைப்படமொன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு இது யார் என கண்டுபிடியுங்கள் என கேட்கப்பட்டிருந்தது.

tapsee
இதற்கு நெட்டிசன் ஒருவர், இந்த ஆம்பள உடம்புக்கு சொந்தக்காரி நிச்சயம் டாப்ஸியாகத்தான் இருக்கவேண்டும் என நக்கல் அடித்தார். அந்த நபருக்கு ரிப்ளை செய்த டாப்ஸி, உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. இதுபோன்ற பாராட்டிற்காக தான் நான் மிகவும் கடினமாக உழைத்தேன். 23ஆம் தேதி வரை காத்திருங்கள்… என கூலாக ரிப்ளை செய்து பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறார்.