---Advertisement---

கேக்குறதுக்கு யாரும் இல்லன்னு நினைச்சீங்களா?!.. பொங்கியெழுந்த நடிகை மீனா!…

Published on: February 20, 2026
---Advertisement---

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் நடிகை மீனா. சிறுமியாக இருக்கும்போதே திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ரஜினி சிறப்பு தோட்டத்தில் நடித்திருந்த ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் மீனா சிறுமியாக நடித்திருந்தார். ஆனால் அதே ரஜினியுடன் முத்து படத்தில் ஜோடியாக நடித்தார்
. அதன் பின் எஜமான், வீரா போன்ற படங்களிலும் ரஜினியுடன் நடித்திருக்கிறார். இதுபோக திரையுலகில் சரத்குமார், சத்யராஜ், பிரபு, கார்த்தி உள்ளிட்ட பல பேருடன் நடித்திருக்கிறார் மீனா..

மீனாவின் கணவர் சில வருடங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். அதன்பின் மீனா மறுமணம் செய்து கொள்ளப் போகிறார் என தொடர்ந்து பலரும் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். ‘எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை. இது தவறான தகவல்’ என தொடர்ந்து மறுத்து வருகிறார் மீனா.

இந்நிலையில்தான், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய மீனா ‘எனக்கு இரண்டாவது திருமணம் என வரும் செய்திகள் என்னை மிகவும் காயப்படுத்துகிறது.. முன்பெல்லாம் என்னைப் பற்றிய செய்திகள் என்னிடம் வந்து சேர்வதற்கே தாமதமாகும்.. ஆனால் இப்போது சோசியல் மீடியா இருப்பதால் எனக்கு உடனே தெரிந்து விடுகிறது.

நான் ஒரு பெண் செலிபிரிட்டி.. சிங்கிளாக இருக்கிறேன் என்பதற்காக உண்மை என்னவென்று தெரியாமல் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?.. கேட்பதற்கு ஆள் இல்லை என்று இப்படி பேசுகிறார்களா?.. இது எல்லாம் பார்க்கும்போது ரொம்ப கோபமா இருக்கு’ என பொங்கியிருக்கிறார்..