ஒரு வாரத்திற்கு இவ்வளவு சம்பளமா? பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published on: October 25, 2021
kamalhassan
---Advertisement---

ஒவ்வொரு தொலைக்காட்சியும் ரசிகர்களை கவரும் விதமாக ஏதேனும் ஒரு புதிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் ரியாலிட்டி நிகழ்ச்சியில் விஜய் டிவியை அடித்து கொள்ளவே முடியாது. புதிது புதிதாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து ரசிகர்களை ஈர்ப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரியாலிட்டி ஷோ என்றால் பிக்பாஸ் தான். தற்போது பிக்பாஸ் சீசன் 5 தொடங்கி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த சீசனில் எதிர்பாராத விதமாக ஒரு சில நாட்களிலேயே நமீதா மாரிமுத்து போட்டியிலிருந்து விலகினார்.

priyanka
priyanka

பின்னர் 17 போட்டியாளர்களில் கடந்த வாரம் முதல் நபராக நாடியா சாங் வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து இரண்டாவதாக 16 போட்டியாளர்களில் நேற்று அபிஷேக் வெளியேற்றப்பட்டார். தற்போது 15 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் யார் அதிக சம்பளம் வாங்குகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி போட்டியாளர் அபினய்க்கு வாரத்திற்கு இரண்டு 2.75 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறதாம். இவரை தொடர்ந்து மதுமிதாவுக்கு 2.50 லட்சமும், பிரியங்காவுக்கு 2 லட்சமும் மற்ற போட்டியாளர்களுக்கு இதைவிட குறைவான தொகை சம்பளமாக வழங்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த சீசனில் பல போட்டியாளர்கள் புது முகங்களாகவே உள்ளனர். அதில் ஒருவர் தான் அபினய். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு வரை அபினய் யார் என்றே பலருக்கு தெரியாது. இந்நிலையில் 18 போட்டடியாளர்களில் அபினய்க்கு ஏன் அதிகப்படியான சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment