வடிவேலு படத்தில் நானா? நைசா நழுவிய இரண்டு முன்னணி நடிகைகள்!

Published on: September 21, 2021
vadivelu
---Advertisement---

வடிவேலுவை அலைக்கழிக்கவிட்ட இரண்டு முன்னணி நடிகைகள்!

vadivelu
வடிவேலு

நடிகர் வடிவேலு ஷங்கர் தயாரிப்பில் 23ம் புலிகேசி படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது ஒழுங்காக படப்பிடிப்பிற்கு வராததால் கண்டித்து எச்சரிக்கப்பட்டார். பின்னர் சம்பளம் தொகையை அளவுக்கு அதிகமாக கேட்டு அதனை தயாரிப்பு நிறுவனம் கொடுக்காத பட்சத்தில் அதையே காரணமாக காட்டி படத்தில் நடிக்கவில்லை.

Also Read

priya-bhavani-shankar
பிரியா பவானி ஷங்கர்

இதனால் ஷங்கர் வடிவேலு மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்ததில் வடிவேலுவுக்கு ரெட் கார்ட் போடப்பட்டது. சுமார் 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ள வடிவேலு நாய் சேகர் என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிக்கவுள்ளதாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார். ஆனால் அந்த தலைப்பை நடிகர் சதீஷ் படத்திற்கு வைத்து அண்மையில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதால் தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என தலைப்பு வைக்க யோசித்து வருகின்றனர்.

இதில் வடிவேலுவுக்கு இணையாக ஒரு வெயிட்டான பெண் கதாபத்திரம் உள்ளதாம். அதற்காக முன்னணி நடிகை பிரியா பவானி ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்த அவரோ நிறைய படங்களை கைவசம் வைத்திருக்கிறேன். எனவே இப்போதைக்கு கால்ஷீட் கொடுக்கமுடியாது வேற யாரையேனும் பாருங்கள் என கூறி அனுப்பிவிட்டாராம்.

keerthi-suresh
கீர்த்தி சுரேஷ்

பின்னர் கீர்த்தி சுரேஷ் வீட்டு பக்கம் போலாமா என யோசித்திருக்கும் படக்குழுவுக்கு அவரும் வந்த வழியே போங்க என வழி அனுப்பிடுவார் போல. காரணம் அண்ணாத்த, சாணிக்காயிதம் மற்றும் தெலுங்கில் சர்காரு வாரி பாட்டா உள்ளிட்ட படங்களில் ஸ்டார் நடிகர்களுடன் நடிப்பதால் வடிவேலு படத்திலெல்லாம் நடிக்க வாய்ப்பே கிடையாது என்கிறது நெருங்கிய வட்டாரம்.

Leave a Comment