காதலர் கழட்டிவிட்டாருன்னு ஏன் கவலைப்படணும்!.. தமன்னாவுக்காக தலை கீழ நிக்கிறவரை பாருங்க!..

by Saranya M |
காதலர் கழட்டிவிட்டாருன்னு ஏன் கவலைப்படணும்!.. தமன்னாவுக்காக தலை கீழ நிக்கிறவரை பாருங்க!..
X

#image_title

நடிகை தமன்னா ஜி சினி விருது விழாவில் கலந்து கொண்டிருந்த போது அவரின் ரசிகர் ஒருவர் அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் போதே திடீரென தலைகீழாக ஆடியது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. மேலும் இந்த வீடியோ இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை தமன்னா இந்தியில் வெளியான சந்த் சா ரோஷன் செஹ்ரா படம் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். அதை தொடர்ந்து தெலுங்கில் ஸ்ரீ மற்றும் தமிழில் கேடி ஆகிய இரு மொழி படங்களிலும் அறிமுகமானார். மேலும், கல்லூரி படத்தின் ரிலீசுக்கு பிறகு தமன்னாவிற்கு பட வாய்ப்புகள் அதிகரித்தது.

#image_title

அயன், சிறுத்தை, சுறா,பையா, வீரம், ஜெயிலர் என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவருடன் நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை. தெலுங்கில் பிரம்மாண்டமாக வெளியான பாகுபலி இரண்டு பாகங்களிலும் நடித்து தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருப்பார். அதை தொடர்ந்து தமிழில் திரைப்பட வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் தற்போது அவர் இந்தி படங்களில் மட்டும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இத்தனை ஆண்டுகளாக திருமணம் செய்துக்கொள்ளாமல் இருந்த தமன்னா இந்தியில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 படத்தில் அவருடன் நடித்த விஜய் வர்மாவை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என ஏதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் சில காரணங்களால் பிரிந்துவிட்டார்கள் என தகவல்கள் பரவிய வண்ணம் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்திலும் இருவரும் ஒன்றாக இல்லை.

இந்நிலையில் தமன்னா ஜி சினி விருது விழாவில் கலந்து கொண்டிருக்கும் போது அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரசிகர் ஒருவர் தமன்னாவுக்காக தலைகீழாக நடனமாடி அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். சில ரசிகர்கள் மேரி மீ தமன்னா என்ற போஸ்டருடன் சுத்திக்கொண்டிருந்தனர். தனக்காக ரசிகர்கள் இப்படியெல்லாம் செய்வதை பார்த்து நெகிழ்ந்து போய்விட்டார். அவர் நடிப்பில் வரும் ஏப்ரல் 17ம் தேதி ஒடெலா 2 திரைப்படம் வெளியாகிறது.

Next Story