சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் 2015ல் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றபடம் வேதாளம். அண்ணன் – தங்கை பாசத்தை மையமாகக்கொண்டு உருவான இப்படத்தில் அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனனும் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும் நடித்திருந்தார்கள்.
அனிருத் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. இப்படம் வெளியானபோது 125 கோடிக்கு மேல் வசூலித்து அஜித்தின் மார்க்கெட்டை மேலும் உயர்த்தியது. இப்படத்தை ஏற்கனவே பெங்காலி மொழியில் சுல்தான் என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டிருந்தனர்.
தற்போது இப்படத்தை தெலுங்கில் “போலோ சங்கர்” என்ற பெயரில் ரீமேக் செய்துவருகின்றனர். இதில் ஹீரோவாக அக்கட தேசத்து சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார். தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கிறார்கள் என்பது அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது இதில் நாயகியாக தமன்னா நடிக்கிறார்.இதுபற்றிய அறிவிப்பை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமன்னா ஏற்கனவே சிரஞ்சீவி நடித்திருந்த ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின்மூலம் அவருடன் இரண்டாவதுமுறையாக நடித்துள்ளார். சிரஞ்சீவி ஏற்கனவே விஜய் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்தார்.அப்படம் சிரஞ்சீவியின் 150 வது படமாக வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது. இதன்பின் அவர் தமிழ் படங்களை ரீமேக் செய்வதில் அதிக ஆர்வம் காட்டிவருகிறார்.
ஓடிடியில் இந்த…
துள்ளுவதோ இளமை…
தென்னிந்தியத் திரையுலகில்…
மிஷ்கின் இயக்கிய…
இந்த பொங்கல்…