இந்தியன் 2வில் இருந்து விலகிய காஜல்.... அதிரடியாய் நுழைந்த நடிகை...

by ராம் சுதன் |
kajal agawal
X

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு படத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் படம் தொடங்கிய நாள் முதல் அடுத்தடுத்து பிரச்சனைகள் வெடித்தது.

முதலில் படத்தில் கமல்ஹாசனின் மேக்கப் திருப்திகரமாக இல்லை என சில மாதங்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா ஊரடங்கு போன்ற தொடர் காரணங்களால் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.

தொடர்ந்து படப்பிடிப்பு தாமதமாகி வந்ததால், கமல்ஹாசன் விக்ரம் படத்திற்கும், சங்கர் தெலுங்கு படத்திற்கும் சென்று விட்டனர். இதனால் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் நடைபெறாமல் தொடர்ந்து இழுபறியில் இருந்து வந்தது. தற்போது அனைத்து பிரச்னைகளும் முடிந்து படத்தின் பணிகள் தொடங்கி உள்ளது.

tamanna

tamanna

ஆனால் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமான நடிகை காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருப்பதால் படத்தில் இருந்து விலகி விட்டார். அவருக்கு பதில் சமந்தா நடிப்பார் என கூறப்பட்டது. மேலும் பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கு பதில் நடிகை தமன்னாவை நடிக்க வைக்க உள்ளார்களாம். இந்தியன் 2 படத்திற்காக காஜல் அகர்வால் ஒரு வாரம் மட்டுமே படப்பிடிப்பில் கலந்துகொண்டாராம். எனவே தமன்னாவை வைத்து முதலிலிருந்து முழுவதுமாக படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம்.

Next Story