வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் இணைந்த பிரபல நடிகை!

by adminram |
sirnjivi
X

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2015ல் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெட்ரா படம் வேதாளம். அண்ணன் - தங்கை பாசத்தை மையமாகக்கொண்டு உருவான இப்படத்தில் அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார்.

அனிருத் இசையமைத்திருந்த இப்படம் 125 கோடிக்கு மேல் வசூலைக்குவித்து அஜித்தின் மார்க்கெட்டை மேலும் உயர்த்தியது. இப்படத்தை ஏற்கனவே பெங்காலி மொழியில் சுல்தான் என்ற பெயரில் ரீமேக் செய்து கடந்த 2018ல் வெளியிட்டிருந்தனர்.

keerthi-suresh-2

Keerthi suresh

தற்போது இப்படத்தை தெலுங்கில் போலோ சங்கர் என்ற பெயரில் ரீமேக் செய்துவருகின்றனர். இதில் ஹீரோவாக மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார். தங்கை பாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். ராக்ஷச பந்தன் தினத்தன்று இப்படத்தின் டீசர் ஒன்றை வெளியிட்டிருந்தது படக்குழு.

சிரஞ்சீவி ஏற்கனவே விஜய் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்தார். கைதி நம்பர் 150 என பெயரிட்டிருந்த அப்படம் சிரஞ்சீவியின் 150 வது படமாக வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது. இதன்பின் தமிழ் படங்களை ரீமேக் செய்வதில் ஆர்வம் காட்டிவருகிறார் அவர்.

tamanna

Tamanna

இந்நிலையில், போலோ சங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே சிரஞ்சீவி நடித்திருந்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது போலோ சங்கர் நடத்தில் நடிப்பதன்மூலம் இரண்டாவது முறையாக சிரஞ்சீவியுடன் இணைந்து நடிக்க உள்ளார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story