தமன்னாவால் கெட்டுப்போன இசை நிகழ்ச்சி... ரசிகர்களுக்கு இப்படி ஒரு கொடுமையா...?

by sankaran v |
Tamanna, A.R.Rahman
X

Tamanna, A.R.Rahman

இலங்கை யாழ்ப்பாணத்தில் ரசிகர்களுக்காக ஏ.ஆர்.ரகுமானின் சிறப்பு இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் தமன்னா கலந்து கொண்டு காவாலய்யா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். டிக்கெட்டை இங்குள்ள இந்திரகுமார் என்பவரது நிறுவனம் சப்ளை செய்தது.

முதலில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்தோஷப்படுத்துவதற்காக இலவசமாக இந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறோம் என்று இந்த நிறுவனம் அறிவித்ததாம். அதன்பிறகு டிக்கெட் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தியதாம். அதாவது ரூ.25000, மூ.7000, ரூ.3000 என்று கட்டணத்தை நிர்ணயித்ததாம்.

Tamanna

Tamanna

முன்வரிசையில் இருப்பவர்களுக்கு ரூ.25000 டிக்கெட் என்று இருந்தது. இங்குள்ள ரசிகர்களைப் பொருத்தவரை தமிழ் சினிமா நடிகர், நடிகைகளை நேரில் பார்ப்பதற்காக பெரிதும் ஆர்வம் காட்டுவார்களாம். அதிலும் தமன்னா போன்ற கவர்ச்சி நடிகை வந்தால் சும்மா விடுவார்களா? முண்டியடிக்கிறார்கள். இதற்கு ஒரே காரணம் அந்த அரங்கில் போதுமான எல்இடி திரைகள் வைக்கப்படவில்லையாம். அரை கிலோமீட்டர் தூரத்திற்குப் பின்னால் இருக்கும் ரசிகர்களுக்குத் தமன்னாவைப் பார்த்தால் வெறும் வெள்ளை புள்ளியாகத் தான் தெரிவார்.

அதனால் அவர்கள் முன்னுக்கு வந்து எப்படியாவது தமன்னாவைப் பார்த்து விட வேண்டும் என்று துடிக்கிறார்கள். இதனால் முன்வரிசையில் இருப்பவர்களின் இருக்கைகள் பறிமுதல் செய்யப்படுகிறது. இதனால் அங்கு ஒரு தள்ளுமுள்ளு நடக்கிறது. இதில் பலரும் மயக்கம் போட்டு விழ, மருத்துவமனைக்குத் தூக்கி விட்டு போனார்களாம்.

அதிலும் தமன்னா இந்தப் பாடலுக்குக் கிட்டத்தட்ட ஆபாச நடனம் போல தான் எல்லா மேடைகளிலும் ஆடி வருகிறாராம். இது இளைஞர்களைப் பெருமளவில் தூண்டி ஒரு அநாகரிகமான செயலுக்கு வித்திடுகிறது. அந்த வகையில் இசை அமைப்பாளர் அனிருத் எவ்வளவோ பரவாயில்லையாம். இவரது இசை நிகழ்ச்சிகளில் கடைசியில் இருந்து முன்வரிசைக்கு ரசிகர்கள் மத்தியில் நடந்து வருவாராம். அதனால் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்து விடுகிறார்.

ஜெயிலர் படத்தில் வரும் இந்தப் பாடல் செம மாஸாக இருந்தது. படத்தில் கவர்ச்சி நடனம் ஆடினால் கூட பெரிய அளவில் பாதிக்கப்படாது. ஆனால் நேரில் ஆடும்போது எத்தனை இளசுகளின் பாதை மாறுகிறது என்பதை நிகழ்ச்சி நடத்துவோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும் சினிமா விமர்சகருமான அந்தனன் தெரிவித்துள்ளார்.

Next Story