அம்மன் வேடத்தில் தமன்னா.. வைரலாக பரவும் புகைப்படம்..!!

by ராம் சுதன் |   ( Updated:2021-11-24 05:18:35  )
tamanna
X

இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. இவர் ரவிகிருஷ்ணா, இலியானா நடிப்பில் வெளியான 'கேடி' படத்தின்மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். கேடி இவரது முதல் படமாக இருந்தாலும் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான கல்லூரி படத்தின்மூலம் அனைவராலும் பரவலாக அறியப்பட்டார்.

இதையடுத்து சூர்யா, அஜித், விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்டு வந்தார். இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான பாகுபலி படத்தில் நடித்தபின் தமன்னாவின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது.

tamanna

tamanna

தற்போது இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படம் சரியாக ஓடவில்லை. அதன்பின் தமிழில் இவர் இந்தப்படத்திலும் நடிக்கவில்லை.

தமிழில் சில படங்களில் நாயகியாக நடிப்பதற்கு இவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அம்மன் கெட்டப்பில் இருக்கும் இவர் வாழை இலையில் உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.

tamanna

tamanna

இது எந்தப்படத்திற்காக இவர் போட்ட கெட்டப் என தெரியவில்லை. இவர் தற்போது தெலுங்கில் நான்கு படம் மற்றும் ஹிந்தியில் இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story