திடீரென பக்தியில் இறங்கிய தமன்னா.. வைரலாகும் புகைப்படம்!
தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. ரசிகர்களால் செல்லமாக இவர் மில்க் பியூட்டி என அழைக்கப்படுகிறார். பஞ்சாபை பூர்வீகமாகக் கொண்ட இவர் தனது 16 வயதிலே ஹிந்தி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின் தெலுங்கில் இவர் சில படங்களில் நடித்திருந்தார்.
பின்னர் 2006ல் தமிழில் ரவிகிருஷ்ணா, இலியானா நடிப்பில் வெளியான கேடி படத்தில் வில்லத்தனம் கலந்த நடிகையாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் நல்ல கதைகளை தேர்ந்தெடுக்காமல் பல தோல்விப்படங்களைக் கொடுத்தார். அதன்பின் தமிழ் மொழியை நன்கு கற்றுக்கொண்டு நல்லகதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
தமிழில் கிட்டத்தட்ட முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். தமிழைப் போலவே தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். இது மட்டுமின்றி இவர் கன்னடா மற்றும் மராத்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவேற்றி வருவதை வழக்கமாகக்கொண்டுள்ளார் தமன்னா. பெரும்பாலும் கவர்ச்சிப் படங்களை பதிவேற்றிவரும் அவர் திடீரென தற்போது பக்திமயமான படங்களை பதிவேற்றியுள்ளார். அதாவது திடீரென ஜம்மு காஷ்மீரில் இருக்கும் வைஷ்ணவி மாதா கோவிலுக்கு விசிட் அடித்துள்ளார்.
அங்கு எடுத்த தனது புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமன்னா.