காசு, பணம் எதுவும் வேணாம்… தமன்னாவின் தங்கமான மனசு – காதலனின் சொத்து இவ்வளவு தானா?

Published on: June 13, 2023
vijay varma
---Advertisement---

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான தமன்னா தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் ,கன்னடம், மராத்தி எனப்பல மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமான தமன்னாவுக்கு கல்லூரி திரைப்படத்தின் வெற்றி கைகொடுத்தது.

அந்த படம் அவருக்கு நல்ல ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. தொடர்ந்து தமிழில் சூர்யா, விஜய், அஜித், ரஜினி, தனுஷ், கார்த்தி என பல சூப்பர் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவர் தற்ப்போது இந்தி மொழி படத்தில் தான் அதிக கவனம் செலுத்தி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

vijay varma tamanna1

இதுவரை சுமார் 70 படங்களில் நடித்துள்ள தமன்னா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில மணி நேரத்திற்கு முன்னர் பேட்டி ஒன்றில் தமன்னா பிரபல பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவை காதலிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ” அவர் மிகச்சிறந்த நபர். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். என்னுடைய எல்லா சந்தோஷத்திற்கும் அவர் தான் காரணம், அவர் என்னை எப்போதும் அக்கறையோடு பார்த்துக்கொள்வார் என கூறியுள்ளார்.

சரி யார் இந்த விஜய் வர்மா? என தேடி பார்த்ததில், இந்தியில் ஒரு சில படங்களிலும், சில வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் லஸ்ட் ஸ்டோரீஸ் திரைப்படத்தில் நடித்தபோது தான் தமன்னாவுடன் நெருக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. விஜய் வர்மாவுக்கு வெறும் ரூ. 17 கோடி சொத்து தான் உள்ளது. ஆனால், அவரை காதலிக்கும் தமன்னா ரூ. 120 கோடி சொத்துக்கு சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.