துட்டுக்கு ஏத்த பிட்டு!.. கவர்ச்சிக்கு ஏத்தமாதிரி ரேட்டு பேசும் தமன்னா!.. புள்ள பொழச்சிக்கும்!..

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்துள்ள நடிகை தமன்னா முதல் சிங்கிளான காவாலா பாடலில் தாறுமாறான கிளாமரில் குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்டதற்கு அதிகளவில் சம்பளம் வாங்கியுள்ளதாக பயில்வான் ரங்கநாதன் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்தியில் சமீபத்தில் தமன்னா நடிப்பில் வெளியான ஜீ கர்தா வெப்சீரிஸ், லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என ஆபாசத்தின் உச்சத்துக்கே சென்று நடித்திருந்த தமன்னாவை அப்படியே அதே மூடுடன் இயக்குநர் நெல்சன் ஜெயிலர் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் என அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தடைகளை தாண்டி வந்து தமன்னாவை தொட்ட ரசிகர்!.. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?..

கண்ட மேனிக்கு கவர்ச்சி:

எது டிரெண்டிங்கோ அதை பிடித்துப் போவது தானே சினிமா, யாருக்கு மவுசு இருக்கிறதோ அவர்களுக்குத் தான் அதிக சம்பளம் என்றூம் ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பதால் தமன்னாவை விட அவங்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பாங்களா, கிழவியா தமன்னா, அது அழகான குமரி இந்த வயசுல காட்டாமல் எந்த வயசுல காட்டப் போறாங்க என்றும் பயில்வான் ரங்கநாதன் காவாலா பாடலில் கண்ட மேனிக்கு கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு நடனம் ஆடிய தமன்னா பற்றி பேசியுள்ளார்.

ஜெயிலர் படத்தில் எல்லாம் தமன்னாவின் நடிப்பு ஒன்றுமே இல்லை முன்னதாக வெளியான வெப்தொடர்களில் எல்லைமீறி லிப் லாக், முத்தக் காட்சி, படுக்கையறை காட்சி என தனது உடம்பில் 85 சதவீதத்தையே தமன்னா காட்டி நடித்து விட்டார் என்றும் பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: இது ஜாக்கெட்டா இல்ல உள்ளாடையா?!.. கிறுகிறுக்க வைத்த கீர்த்தி சுரேஷ்… சூடேத்தும் புகைப்படங்கள்…

2 கோடி இன்னும் அதிகமா கேட்குறாங்க:

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் டான்ஸ் ஆடினால் யார் பார்ப்பாங்க, அவர் எப்போதும் போல ஒரே ஸ்டெப்பைத் தான் இந்த படத்திலும் போட்டிருக்கிறார். பக்கத்தில் தக தகன்னு தமன்னா ஆடியதால் தான் காவாலா பாடலை அத்தனை மில்லியன் பேர் பார்த்து வருகின்றனர் என்றும் அதற்கு அடுத்து வெளியான ஹுகும், ஜுஜுபி பாடல்கள் ஏன் ரொம்ப பெருசா ஓடலை என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

நடிகை தமன்னா ரஜினிகாந்துடன் முதன் முறையாக இணைந்து நடித்துள்ள நிலையில், இந்த படத்துக்கு வாங்கினதை விட அடுத்த படத்துக்கு இன்னும் 2 கோடி சம்பளத்தை அதிகமாக ஏற்றிவிட்டார் என்றும் பயில்வான் ரங்கநாதன் ஒரே போடாக போட்டுள்ளார். ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரும் நிலையில், தியேட்டர் முழுக்க காவாலா வைப் தான் இருக்கும் என தெரிகிறது.

இதையும் படிங்க: துருவ நட்சத்திரம் ரிலீஸுக்கு வந்த அடுத்த ஆப்பு!.. கெளதம் மேனன் இப்போதைக்கு கரைசேர மாட்டாரு போல!..

 

Related Articles

Next Story