தூக்குங்கடா அந்த பொண்ண... ஜெயிலர் படத்தில் வேற ஹீரோயின்? அதிருப்தியில் அழுத்தம் கொடுக்கும் ரஜினி!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த ரவி, விநாயகன், மிர்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தை ரஜினி, நெல்சன் இருவரும் பெரிதாக எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். நெல்சன் கோலமாவு கோகிலாவுக்கு பிறகு தொடர் தோல்வியை சந்தித்து கோலிவுட்டில் பெரும் அவமானத்தை சந்தித்து வருகிறார். அண்மையில் கூட பிரபல யூடியூப் சேனல் வழங்கிய விருது விழாவில் விஜய்யின் லியோ படத்தை இயக்கும் லோகேஷுக்கு பவுன்சர்கள் சூழ அணிவகுத்து வந்து ஆரவாரத்தோடு வரவேற்றனர்.
ஆனால் நெல்சன் கிங்ஸ்லியுடன் தனியாக நடந்து வந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அவர் அவமானப்படுத்தப்படுவதை கண்டு ரசிகர்கள் அனுதாபம் அடைந்தனர். எனவே எப்படியாவது ஜெயிலர் படத்தை மாபெரும் ஹிட் படமாக கொடுக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் நெல்சன் இருக்கிறார். இந்த சமயத்தில் ஜெயிலர் படத்தின் ஹீரோயின் தமன்னா அருணிமா ஷர்மா இயக்கியுள்ள ஜீ கர்தா எனும் வெப் தொடரில் ஆபாச காட்சிகள், உடலுறவு காட்சிகளில் அரைநிர்வாணமாக நடித்து பேரதிர்ச்சி கொடுத்துள்ளார். இது ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு இழிவு ஏற்படுத்தியுள்ளதாக ஒட்டுமொத்த படக்குழுவும் அதிருப்தியில் உள்ளனர்.
ஹீரோயின் மாற்றிவிடலாம் என பார்த்தால் கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இனிமேல் என்ன செய்ய முடியும் என எனவே தம்மன்னாவின் காட்சிகளை மட்டும் வெட்டி நீக்கிவிட்டு வேறு நடிகையை போடலாமா? என படக்குழு யோசித்து தலையை பிச்சிகொள்கிறார்களாம். ஏம்மா தமன்னா இந்த நேரத்துலயா இப்படி பண்ணுவ என ரஜினியும் கடுங்கோபத்தில் இருக்கிறாராம். இந்த விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.