காதலருக்கு டாட்டா!.. பிரபல தயாரிப்பாளருடன் ஜோடி போட்ட தமன்னா.. லேட்டஸ்ட் போட்டோவை பாருங்க!..

by Saranya M |   ( Updated:2025-03-29 07:49:17  )
காதலருக்கு டாட்டா!.. பிரபல தயாரிப்பாளருடன் ஜோடி போட்ட தமன்னா.. லேட்டஸ்ட் போட்டோவை பாருங்க!..
X

#image_title

சமீபத்தில் ஹோலி கொண்டாட்டத்தில் தமன்னா மற்றும் அவரது முன்னாள் காதலரான விஜய் வர்மாவும் தனித்தனியாக கலந்துக்கொண்டிருந்த புகைப்படங்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது திரைப்பட தயரிப்பாளருடன் தமன்னா எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

தமன்னா சந்த் சா ரோஷன் செஹ்ரா என்ற இந்தி படம் மூலம் தன் திரைப்பயணத்தை தொடங்கினார். அதை தொடர்ந்து தமிழில் கேடி படத்தில் நெகடிவ் ரோலில் நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து தமன்னாவுக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்து கல்லூரி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து அயன், பையா, சிறுத்தை, வீரம், தர்மதுரை, அரண்மனை 4 போன்ற பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

#image_title

மேலும், தெலுங்கில் ஸ்ரீ படத்தை தொடர்ந்து ஊசரவல்லி, ரச்சா, தட்கா, ஊபிரி உள்ளிட்ட பல படங்கள் நடித்திருந்தார். டோலிவுட்டில் பெரிய பட்ஜெட் படமான பாகுபலி இரண்டு பாகங்களிலும் சண்டைக் காட்சிகளில் கூட அசாதரனமாக நடித்துள்ளார். மேலும் ஜெயிலர் படத்தில் காவலய்யா படலுக்கு மிக கவர்ச்சியாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

#image_title

அடுத்ததாக, மது தயாரிப்பில் அசோக் தேஜா இயக்கத்தில் உருவாகி வரும் ஒடெலா2 திரைப்படம் எப்ரல் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் தமன்னா சிவ சக்தியாக நடித்துள்ளார். தம்மன்னாவுடன் தயானந்த் ரெட்டி, முரளி சர்மா, ஹெப்பா படேல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், அஜனீஷ் லோக்நாத் இப்பத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தமன்னாவின் வித்தியாசமான நடிப்பை பார்க்க ரசிகர்கள் எதிர்பார்புடன் கார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

நடிகை தமன்னா லஸ்ட் ஸ்டோரீஸ் 2ல் தன்னுடன் நடித்த நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்தார். இவர்களின் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதை தொடர்ந்து அண்மையில் நடந்த ஹோலி பண்டிகையில் கூட ஒரே இடத்தில் தனித்தனியாக கொண்டாடியிருந்தனர். இந்நிலையில் தற்போது நடிகை தமன்னா பாலிவுட் படத்தயாரிப்பாளர் கரண் ஜோஹருடன் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அடுத்த காதலுக்கு ரெடியாகிட்டாரா தமன்னா என கிண்டல் செய்து வருகின்றனர். ஆனால், கரண் ஜோஹர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் செலிபிரிட்டி என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் என்றும் ஃபேஷன் போட்டோஷூட் நடத்தியிருக்கிறார் தமன்னா என அவரது ரசிகர்கள் கூறீ வருகின்றனர்.

Next Story