விஜய்யை எனக்கு சுத்தமா தெரியாது...! சொல்கிறார் பிரபலமான நடிகை...
தமிழ் சினிமா உலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் கல்லூரி படத்தின் மூலம் ஒரு கல்லூரி மாணவியாக அறிமுகமாயிருப்பார்.
அந்த படத்தில் தமிழே சுத்தமா தெரியாதவராய் நடித்திருப்பார். உண்மையில் தமிழ் தெரியாத பொண்ணுதான். அதன்பின் வரிசையாக படங்கள் வாய்ப்பு அவரை தேடி வந்து கொண்டு இருந்தன. பெரும்பானமையான முன்னனி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.
விஜய், அஜித், சூர்யா, கார்த்தி போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த இவர் விஜயுடன் சுறா படத்தின் மூலம் தான் முதன் முதலில் ஜோடி சேர்ந்தார். அந்த படத்தில் நடிப்பதற்கு முன் விஜய்னா யாருனே தெரியாது. அவரை பற்றி சுத்தமா தெரியாது என ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
இதையும் படிங்களேன் : காதலா? மோதலா? நயன்தாராவுடன் மோதும் ஜெய் – எண்ணித் துணிக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!!
பிறந்த குழந்தை முதல் பெரியவர் வரை விஜய் பற்றி தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். அதில் இவர் விதிவிலக்கா இருந்திருக்கார்.