மனுஷன் புடிச்சாலும் புலியங்கொம்பா பிடிச்சிருக்காரே!.. ஹன்சிகா,த்ரிஷாவை தொடர்ந்து அரண்மனை 4ல் களமிறங்கும் பளபள நடிகை..
தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் முன்னனி நடிகைகளாக வலம் வந்தவர்கள் எல்லாம் தற்போது மீண்டும் சினிமா பக்கம் படையெடுத்து வருகின்றனர். சிம்ரன், லைலா என ஒரு காலத்தில் சினிமாவையே தன் வசம் வைத்தவர்கள் திருமணமான பின்பு சிறிது இடைவேளை எடுத்திருந்தனர்.
ஆனால் சமீபகாலமாக ஏராளமான படங்களில் அவர்களை மீண்டும் பார்க்க முடிகிறது. அதே போல் ஹன்சிகா , ஸ்ரேயா, இவர்களும் திருமணம் ஆனதும் சினிமாவிற்கு குட்பை சொல்வார்கள் என்று எதிர்பார்த்திருந்தனர் ரசிகர்கள். ஆனால் ஸ்ரேயா மறுபடியும் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கின்றார்.
அதே போல் ஹன்சிகாவும் அன்று விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் ‘இப்பொழுது தான் என் தாய் வீட்டிற்கு வந்த ஒரு உணர்வு ஏற்படுகிறது’ என்று தன் சினிமா ஆசையை பற்றி கூறினார்.அந்த வரிசையில் நடிகை தமன்னா சிறிது காலம் எந்த பட வாய்ப்பும் இல்லாமல் கொஞ்ச நாள் காணாமல் போயிருந்தார்.
நீண்ட நாள்களுக்கு பிறகு ரஜினியின் ஜெய்லர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது அடுத்ததாக மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் தமன்னா. அதுவும் சுந்தர்.சி யின் அரண்மனை 4 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
ஏற்கெனவே அரண்மனை 4 படத்தில் ராஷிகண்ணாவும் நடிக்கிறார். அதை தொடர்ந்து இப்போது தமன்னாவும் இந்தப் படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஏற்கெனவே சுந்தர்.சி யின் கூட்டணியில் ஹன்சிகா, த்ரிஷா போன்றோர் நடித்து அவர்களுக்கு ஒரு வெயிட்டான ரோலைத் தான் சுந்தர்.சி கொடுத்திருந்தார்.
அதே போல் இந்தப் படத்திலும் தமன்னாவுக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரமாகத் தான் இருக்கும் என சொல்லப்படுகிறது. இன்னும் கூடுதல் தகவல் என்னவென்றால் சுந்தர்.சிக்கு தங்கை கதாபாத்திரமாக கூட தமன்னா நடிக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்கிறார்கள்.
இதையும் படிங்க :இயக்குனரை ஸ்டுடியோவிலிருந்து விரட்டிய இளையராஜா!.. அட இந்த சின்ன காரணத்துக்கா?!..