Cinema News
அஜீத்கிட்ட அது எனக்கு பிடிக்கல.. சொல்லவும் முடியல!.. பல வருடங்கள் கழித்து பேசிய தமன்னா…
தமிழ் சினிமாவில் அஜித் என்றாலே யாருக்குத்தான் பிடிக்காது.அழகான தோற்றம், நல்ல நிறம் பார்த்ததும் பிடிக்கும் மாதிரியான முகம் என அனைவரையும் எளிதில் ஈர்க்கும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.அவருடன் நடித்த ஆரம்பகால நடிகைகளில் இருந்து இப்போது வரை அனைவரும் அஜித்தை பற்றியும் அவரின் குணங்களையும் பற்றி பெருமையாக பேசி வருகிறார்கள்.
ஆனால் நடிகை தமன்னா மிகவும் ஓப்பனாக அஜித் மட்டுமில்லாமல் அவர் சேர்ந்து நடித்த அனைத்து நடிகர்களின் படங்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை மிக வெளிப்படையாக கூறிவருகிறார். விஜய் நடித்த சுறா படத்தில் ஏண்டா நடித்தோம் என்றளவுக்கு தமன்னாவை கொண்டு போய்விட்டதாம்.
படம் நல்லப் படம் தான். ஆனால் அதில் நான் நடித்திருக்க கூடாது என கூறினார். இதற்கிடையில் அவரை பேட்டி எடுத்த நிரூபர் குறுக்கீட்டு ‘வீரம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருக்கிறீர்கள், படத்தின் முதல் பாதியில் நல்ல மாஸாக வந்திருப்பார் அஜித். இரண்டாம் பாதியில் உங்களோட காம்பினேஷன் இருக்கும். அப்போது அஜித் முழுவதும் ஷேவ் செய்து தோன்றியிருப்பார். அந்த நேரத்தில் அஜித் கொஞ்சம் டை அடிச்சு நடிச்சுருக்கலாம் என யோசித்தீர்களா? இல்ல அந்த மாதிரி எதுவும் கேட்பீங்களா? அஜித் ரசிகராக இருந்த எங்களுக்கே அப்படி தோணுச்சு. ஏனெனில் வயசை மேட்ச் பண்றதுக்கு அப்படி பண்ணா நல்லா இருந்திருக்கும், நீங்கள் கேட்பீங்களா?’ என தமன்னாவிடம் நீண்ட ஒரு கேள்வியை முன்வைத்தார்.
இதையும் படிங்க : நாடகத்தில் எம்.ஜி.ஆர் நடித்த முதல் வேடம்… பேசிய முதல் வசனம்… வெளிவராத தகவல்கள்!..
அதற்கு பதிலளித்த தமன்னா இப்போது கேட்பேன் என்று கூறினார். ஆரம்ப காலங்களில் எனக்கு அப்படி சுதந்திரம் இல்லை. ஆனால் ஒவ்வொரு நடிகரும் கேள்வி கேட்கனும் , மற்ற துறைகளில் அந்த சுதந்திரம் இருக்கிறது. ஆனால் சினிமாவில் அப்படி இருக்கிறதா என தெரியவில்லை என்று கூறினார். மேலும் எதையும் வெளிப்படையாக பேச வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் சில இயக்குனர்கள் அந்த அளவுக்கு ஸ்பேஸ் கொடுக்கிறார்கள். சிலபேர் ஸ்பேஸ் கொடுப்பதில்லை. உங்களுக்கு அந்த மாதிரி ஸ்பேஸ் கொடுக்காத பட்சத்தில் அந்த வாய்ப்பை ஒத்துக் கொள்ளாதீர்கள் என்று அறிவுரை கூறினார்.
அதுமட்டுமில்லாமல் யார் ஒருங்கிணைந்து ஒத்துழைத்து நடிக்க விரும்புகிறார்களோ அவர்களுடனே நான் நடிக்க விரும்புகிறேன் என்றும் ஒவ்வொருவரும் இணைந்தே எல்லா விஷயங்களிலும் பணியாற்ற வேண்டும் என்றும் கூறினார். ஏனெனில் அந்த செட்டில் ஒரு நடிகர் மட்டும் நடிப்பதில்லை. அவருடன் சேர்ந்து 10 , 15 பேர் இணைந்து பணியாற்றுகிறோம் அல்லவா? அதனால் மற்றவர்களையும் கொஞ்சம் கருத்தில் கொண்டு தான் சினிமா இயங்க வேண்டும் என்ற கருத்தில் அந்த பதிலை கூறினார் தமன்னா.