அவர ரொம்ப பிடிச்சிருக்கு.. சந்தோஷமா இருக்கேன்!. நடிகருடன் காதலில் விழுந்த தமன்னா?...

by சிவா |   ( Updated:2023-06-13 12:09:09  )
tamannah
X

tamannah

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகம் நடித்தவர் தமன்னா. தமிழில் ‘கல்லூரி’ படத்தில் அறிமுகமாகி பல படங்களிலும் நடித்தார். தமிழில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி என எல்லோருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். அதேபோல், தெலுங்கிலும் பிரபாஸ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் இவர். பாகுபலி படத்திலும் நடித்திருந்தார். இப்போது ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

tamannah

tamannah

தமன்னாவுக்கு 33 வயது ஆகிறது. இவர் மும்பையை சேர்ந்தவர். தாய் மொழி ஹிந்தி. சமீபகாலமாக ஹிந்தி படங்கள் மற்றும் வெப் சீரியஸில் நடிக்க துவங்கியுள்ளார். கடந்த சில நாட்களாகவே தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்தது. தமன்னாவும் அவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி வந்தது. சமீபத்தில் இருவரும் டின்னருக்கு ஒன்றாகவும் சென்றனர். எனவே, கிசுகிசு பரவ துவங்கியது.

tamannah

இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய தமன்னா ‘எனக்கு விஜய் வர்மாவை மிகவும் பிடித்திருக்கிறது. அவருடன் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. விஜயுடன் இருக்கும்போது நான் என்னை மறந்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படத்தில் நடித்தபோது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதிகம் சாதிக்கும் பெண்கள் எல்லாவற்றும் மெனக்கெட வேண்டும். கணவருக்காக ஒரு பெண் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ளும் சமுதாயத்தில் வாழ்கிறோம். ஆனால், நானே உருவாக்கிய உலகத்தில் எனக்காக இருப்பவர்தான் விஜய் வர்மா. என் மகிழ்ச்சிகான இடமாக அவர் இருக்கிறார்’ என அவரை பற்றி நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் பேசியுள்ளார் தமன்னா.

tamannah

இதை வைத்து பார்க்கும்போது தமன்னாவும், விஜய் வர்மாவும் காதலில் விழுந்திருப்பதாகவே எல்லோரும் நினைக்கின்றனர். ஆனால், காதல் பற்றி தமன்னா உறுதி செய்வாரா என்பது தெரியவில்லை.

Next Story