நடிகரால் முட்டுக்கட்டையான கேஜிஎஃப் 3 படத்தின் ஷூட்டிங்.. என்னங்க இப்படி ஆச்சு?
KGF3: தமிழ் சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது மொத்த சினிமா ரசிகர்களுக்கும் வித்தியாசமான அனுபவத்தினை கொடுத்த திரைப்படம் கேஜிஎஃப். இப்படத்தின் மூன்றாம் பாகம் வரும் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது அதுகுறித்த அப்டேட் ஒன்று கசிந்துள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான கன்னட திரைப்படம் கேஜிஎஃப். இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வைரல் ஹிட்டடித்தது. இதனால் ரசிகர்கள் அப்படத்திற்கு வரவேற்பை கொட்டி கொடுத்தனர். இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் இருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் காத்திருந்தனர்.
இதையும் படிங்க: தங்கம்னு நினைச்சா அது செங்கலாயிருச்சு! தங்காலனை பங்கம் செய்த இயக்குனர்
தமிழ் சினிமாவின் மாஸ் ஹிட் நடிகரான விஜயின் பீஸ்ட் படத்துடன் வெளியான கேஜிஎப் 2. வசூல் வேட்டை நடத்தியது. பட்டி தொட்டி எல்லாம் பெற்றெடுத்து யாஷின் திரைப்பட வாழ்க்கையில் முக்கிய இடம் பிடித்தது. இப்படத்தின் கிளைமாக்ஸ் மூன்றாம் பாகத்திற்கு லீட் கொடுத்தே படத்தை முடித்து இருப்பர்.
இருந்தும், கேஜிஎப் 3 குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகாமலே இருந்து வந்தது. பிரசாந்த் நீல் சலார் படத்தை முடித்து தற்போது என் டி ஆரின் 31வது படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல் ஒன்று வெளியாகி வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: கொட்டுக்காளி விழாவில் மிஷ்கின் வேணும்னே பேசினாரா? எதுக்கு இந்த அலப்பறை?
இந்நிலையில் கேஜிஎப் திரைப்படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கிறது. ஹாம்லே ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. இந்நிலையில் அந்நிறுவனம் தற்போது காந்தாரா சாப்டர் 1 படத்தினை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது அப்படத்தின் முப்பது சதவீதம் ஷூட்டிங் முடிந்துள்ளது. மேலும் ஜூனியர் என்டிஆர் படத்தை முடித்துக் கொண்டு அஜித்தின் 64வது படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் தயாரிப்பு நிறுவனமும் பிரசாந்த் நீலும் தன்னுடைய வேலைகளை முடித்துக் கொண்டு அடுத்த வருடம் இறுதியில் தான் கே ஜி எஃப் மூன்றில் இணைவார்கள் எனவும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.