விக்ரமிற்கு பிறகு இப்படியொரு வித்தை காட்டும் ஆள் சிம்புதான்! – தமிழ் சினிமாவை ஆச்சரியப்பட வைக்கும் சிம்பு!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல காலங்களாக அதில் தன்னை தக்க வைத்துக்கொண்டவர் சிம்பு. சிம்பு நடித்து வெளிவந்த மாநாடு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து வெந்து தணிந்தது காடு திரைப்படமும் டீசண்டான ஹிட் கொடுத்தது.
அடுத்ததாக அவர் நடித்த பத்து தல திரைப்படம் வெளியாக இருக்கிறது. மேலும் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். ஒவ்வொரு படத்தின்போதும் அந்த படத்திற்கு உடலை மாற்றி அமைக்கிறார் சிம்பு. தமிழ் சினிமாவிலேயே இதற்கு முன்னர் நடிகர் விக்ரம்தான் இந்த முறையை கையாண்டார்.
2020 காலக்கட்டங்களில் அதிக உடல் பருமனோடு இருந்தார் சிம்பு. கொரோனா காலக்கட்டத்தில் தொடர்ந்து உடல் எடையை குறைப்பதற்கான தீவிரமான முயற்சியில் இருந்தார். மாநாடு திரைப்படத்தில் நடிக்கும்போது உடல் எடையை வெகுவாக குறைத்திருந்தார் சிம்பு.
அதன் பிறகு வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு இன்னும் உடல் எடையை குறைக்க வேண்டியிருந்தது. எனவே இன்னுமமும் உடல் எடையை குறைத்தார். பிறகு பத்து தல திரைப்படத்திற்கு வரும்போது அந்த படத்திற்காக உடல் எடையை அதிகரித்தார் சிம்பு.
தற்சமயம் அடுத்த படத்திற்காக மீண்டும் உடல் எடையை குறைத்து வருகிறார். இந்த மாதிரி படங்களுக்காக உடல் எடையை கூட்டி குறைப்பதை விக்ரமிற்கு பிறகு சிம்புதான் செய்கிறார். சினிமாவில் சிம்பு இந்த அளவிற்கு ஆர்வமாக வேலை பார்ப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.