யாருக்கெல்லாம் ‘பெஸ்ட் டீச்சர்’ அவார்டு கொடுக்கப் போறீங்க? வாத்தியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்கள்
இன்று உலகமே ஆசிரியர் தினத்தை கொண்டாடிக் கொண்டு வருகின்றார்கள். முன்னாள் மறைந்த ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அவர் பிறந்த செப்டம்பர் 5 ஆம் தேதியை ஆசிரியர் தினமாக ஆண்டுதோறும் அணுசரித்து வருகிறோம். சிறு குழந்தைகள் உட்பட அவர்களின் பிடித்தமான விளையாட்டாக டீச்சர் விளையாட்டைத்தான் சொல்வார்கள். அப்படி இந்த ஆசிரியர் தொழில் அனைவருக்கும் பிடித்தமான தொழிலாகவே இருக்கின்றது.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் , நடிகைகள் ஆசிரியர் கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் பேராதர்வை பெற்றிருக்கின்றனர். அந்த வகையில் யார் யாரெல்லாம் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருந்தார்கள் என்பதைதான் பார்க்க இருக்கிறோம்.
இதையும் படிங்க: ஆசை அறுவது நாள்.. மோகம் மூப்பதே நாள்.. ப்ரியா ஆனந்துடன் லிவிங் டூகெதர்.. கூத்தடித்து விட்டு ப்ரேக்அப் செய்த அதர்வா?…
எம்.ஜி.ஆர் : சினிமாவில் வாத்தியார் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது எம்.ஜி.ஆர்தான். ஆனால், அவர் பாடம் சொல்லி கொடுக்கும் வாத்தியார் இல்லை. குஸ்தி சொல்லி கொடுக்கும் சண்டை வாத்தியார். அதேநேரம், தான் நடித்த படங்களில் நல்ல கருத்துக்களை மக்களுக்கு சொல்லிவிட்டு போன வாத்தியார்.
கமல்ஹாசன்: உலகநாயகன் கமல்ஹாசன் நம்மவர் படத்தில் வாத்தியாராக நடித்திருப்பார். வாலிப வயதில் கல்லூரி மாணவ, மாணவிகள் தவறான வாழ்க்கைக்கு சென்றுவிடக்கூடாது என நினைக்கும் வாத்தியாராக வருவார். தவறான வழிக்கு சென்ற மாணவர்களை திருத்தி நல்வழிக்கு கொண்டு வருவார்.
விஜயகாந்த்: பொதுவாகவே, தான் நடிக்கும் படங்களில் நல்ல கருத்துக்களை பேசும் விஜயகாந்த் ரமணா படத்தில் வாத்தியாராகவே நடித்திருப்பார். அவரின் மனைவி, மகள் இறந்த நிலையில், தன்னிடம் படித்த மாணவர்களை வைத்துக்கொண்டு அதிக லஞ்சம் வாங்குபவர்களை வேட்டையாடும் வாத்தியாக கலக்கி இருந்தார்.
இதையும் படிங்க: விஜயை மட்டுமல்ல ரஜினியையுமே வச்சு செய்த பிரச்னை… அவரின் படத்துக்கே தடை உத்தரவு போட்ட பின்னணி!
ஜோதிகா: ராட்சசி படத்தை யாராலும் மறக்க முடியாது. ஜோதிகாவின் கம்பேக்கிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த படமாக ராட்சசி படம் அமைந்தது. நேர்மையான ஆசிரியையாக அதுவும் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியையாகவும் கொடுத்த கதாபாத்திரத்தை வெற்றிகரமாக செய்து முடித்திருப்பார்.
சமுத்திரக்கனி: சேட்டை என்ற படத்தில் சமுத்திரக்கனியும் ஒரு ஆசிரியராக நடித்திருப்பார். இவரை போல் நமக்கும் ஒரு ஆசிரியர் கிடைக்கமாட்டாரா? என்று ஏக்கத்தை அனைத்து மாணவர்களிடமும் ஏற்படுத்தியவர். மாணவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எப்படி பழக வேண்டும் என தன் நடிப்பின் மூலம் உணர்த்தியவர்.
தனுஷ் : வாத்தி படத்தில் வாத்தியாராக வந்து ரசிகர்களை கவர்ந்தார். கல்லூரி மாணவர்களுக்கு இடையே இருந்த இட ஒதுக்கீடு, சாதி மதம் பேதம் பார்த்து பழகும் மாணவர்களுக்கு அறிவுரை சொல்லும் வாத்தியாராக வந்து ரசிக்க வைத்தார்.
இதையும் படிங்க: தலைவர் 170-ல் களமிறங்கும் மாஸ் வில்லன்!.. அப்போ சிறப்பான சம்பவம் இருக்கு மக்களே!..