டப்பிங்கிலும் கலக்கும் டாப் 5 கோலிவுட் ஸ்டார்ஸ்... அச்சோ இவர் வாய்ஸ் தான் இதா?
சினிமா பிரபலங்களுக்கு அவர் நடிப்பு எத்துனை அளவு முக்கியமோ, அவர்களுக்கு கொடுக்கப்படும் குரலும் அத்துனை முக்கியம். இதில், சூப்பர் ஹிட் படங்களின் கதாபாத்திரங்களுக்கு சில முன்னணி பிரபலங்கள் தான் வாய்ஸ் கொடுத்திருப்பார்கள். அப்படி, டாப் படங்களுக்கு வாய்ஸ் கொடுத்த முன்னணி நடிகர்கள் யார் தெரியுமா?
சிவகார்த்திகேயன்:
தமிழில் டப் செய்யப்பட்டு வெளியான படம் ஓ மை பிரண்ட். இப்படத்தில் சித்தார்த்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் டப்பிங் பேசி இருந்தார்.
விக்ரம்:
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோ விக்ரம் அஜித்திற்கு டப்பிங் பேசி இருக்கிறார். அஜித் நடிப்பில் வெளியான அமராவதி மற்றும் பாசமலர் படங்களுக்கு அஜித் வாய்ஸாக அமைந்தது விக்ரம் தான். மேலும், விக்ரம் டப்பிங் கலைஞராக தான் தமிழ் சினிமாவிற்கு வந்தார். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம். இப்படத்தில் அஜித், மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், தபு மற்றும் அப்பாஸ் நடித்திருப்பார்கள். இதில் அப்பாஸிற்கு நடிகர் விக்ரம் தான் டப்பிங் பேசியிருந்தார். அதுமட்டுமல்லாமல், மின்சார கனவு படத்தில் பிரபு தேவாவிற்கு விக்ரம் தான் டப்பிங் பேசியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மோகனுக்கு குரல் கொடுத்து படங்களை வெள்ளிவிழாவிற்கு வித்திட்ட டப்பிங் கலைஞர் இவரா?!
நாசர்:
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் நாசர். இவரும் பல படங்களுக்கு வேறு சில நடிகர்களுக்கு டப்பிங் பேசி இருக்கிறார். கமலின் இந்தியன் படத்தில் போலீஸாக வருவார் நெடுமுடி வேணு. இவருக்கு வாய்ஸ் கொடுத்தது நாசர் தானாம். அதுமட்டுமல்லாமல், ஆளவந்தான் படத்தில் கமலின் தந்தையாக வரும் மிலன் குணாஜிக்கும் டப்பிங் பேசி இருக்கிறார்.
ஆண்ட்ரியா:
தமிழில் நடிகையாக இருப்பவர் ஆண்ட்ரியா. இவர் நடிப்பது மட்டுமல்லாமல் பாடகியாகவும் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், பல ஹிட் நாயகிகளின் குரலும் இவருக்கு தான் சொந்தம். ஆடுகளம் படத்தில் டாப்ஸி, தங்கமகன் படத்தில் எமி ஜாக்சன், வேட்டையாடு விளையாடு படத்தில் கமாலினி முகர்ஜி, நண்பன் படத்தில் இலியானா என லிஸ்ட் நீளும். அனைத்தும் ஹிட் என்பதும் கொசுறு தகவல்.