நடிகர்களில் பல பேர் நடிப்பையும் தாண்டி சில சமூக சார்ந்த நலனில் அக்கறை காட்டி வருகிறார்கள். நடிப்பது மட்டும் ஒரு வேலை இல்லை அதையும் தாண்டி மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு சில நடிகர்கள் இருந்து வருகின்றனர். ஒரு காலகட்டத்திற்கு மேல் நடிகர்களின் வாய்ப்புகள் குறைய அடுத்து அவர்கள் எப்படி மக்களை தொடர்பு கொள்வது என்பது மாதிரியான சிந்தனையில் இருக்கின்றனர்.
அந்த வகையில் ஹோட்டல் அமைத்து அதன் மூலம் தன்னை பிரபலப்படுத்துவது, திருமண மண்டபங்கள் அமைத்து காட்டுவது என இந்த மாதிரியான வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இந்த நிலையில் ஒரு சில பிரபலங்கள் சொந்தமாக கோயில்களை அமைத்து அதன் மூலம் மக்களுக்கு ஒரு விதத்தில் நல்ல செயல்களை செய்கின்றனர்.
அதில் நடிகர் அர்ஜூன் போரூரை அடுத்த கெருகம்பாக்கத்தில் 28 அடி உயரம் 17 அடி அகலம் கொண்ட நிலையில் பெரிய ஆஞ்சநேயர் சிலையை அமைத்திருக்கிறார். இந்த சிலையானது 200 டன் எடையில் ஒரே கல்லால் செதுக்கப்பட்டுள்ளதாம். இந்த கோயிலை தனது சொந்த செலவிலேயே அர்ஜூன் அமைத்து அதற்கு கும்பாபிஷேகமும் செய்திருக்கிறார்.
அடுத்ததாக காமெடியில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. இவருக்கு சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரணமல்லூர் அருகே இருக்கும் மேல்நாகரம்பேடு என்ற கிராமமாம். அங்கு ஏற்கெனவே யோகிபாபுவிற்கு 5 செண்ட் நிலம் உள்ளதாம்.அங்கு ஏற்கெனவே ஒரு அம்மன் கோயிலை கட்டியவர் திருமணத்திற்கு பிறகு அந்த கோயில் பக்கத்தில் வராகி கோயிலை கட்டி கும்பாபிஷேகம் செய்தாராம்.
அதே போல் நடிகர் ராகவா லாரன்ஸும் ராகவேந்திரா கோயிலை கட்டி அதனுள் சாய்பாபாவிற்கான சிலைகளையும் வைத்துள்ளார். கூடவே தன் அம்மாவிற்காக அம்மா உருவத்தில் சிலையும் வைத்திருக்கிறார். வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் அந்த கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து வருகிறாராம்.
இதையும் படிங்க : ரஜினி கேட்ட கேள்வியில் ஆடிப்போன பாலச்சந்தர்.. அப்படி என்ன கேட்டார் தெரியுமா?..
இவர்கள் வழியில் சமீபத்தில் புதிதாக வில்லன் நடிகர் டேனியல் பாலாஜியும் ஒரு கோயிலை கட்டியிருக்கிறாராம். சென்னை ஆவடி பகுதியில் அங்காள பரமேஸ்வரி ஆலயம் ஒன்றை கட்டியிருக்கிறாராம். அதற்கான கும்பாபிஷேகம் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பூஜைகளை செய்திருக்கிறார்.
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…