ஒன்னத்துக்கும் ஆகாத லிஸ்டில் இருந்த நடிகர்கள்!..அடைஞ்ச உயரத்த பாத்தா அசந்து போயிடுவீங்க!..
தமிழ் சினிமாவில் உச்ச நிலையில் இருக்கும் நடிகர்கள் சந்தித்த பிரச்சினைகள் அவர்கள் கடந்து வந்த பாதைகள், அவமானங்கள், அடைந்த லட்சியங்கள் இவைகளை கூர்ந்து கவனித்தால் அதன் மூலமாவது அவர்களது ரசிகர்களுக்கு ஒரு பாடமாக கூட இருக்கலாம். அந்த வகையில் தான் இந்த பதிவு. அந்த நடிகர்களின் பட்டியல் இதோ..
நடிகர் ரஜினிகாந்த்: தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக, ஒரு நல்ல மனிதராக பெரும் உச்ச நிலையில் இருக்க கூடிய நடிகர். இவர் ஆரம்பத்தில் கண்டக்ராக இருந்து சினிமா மீதுள்ள ஆர்வத்தால் நடிக்க வந்தார் என்றாலும் உருவ கேலிகளால் மிகவும் கஷ்டப்பட்டார். நண்பர்கள் மத்தியிலும் பொது இடங்களிலும் இவரின் உருவத்தை நிறத்தை கிண்டல் செய்யாதவர்களே இல்லை. மேலும் தான் பட்ட கஷ்டங்களை பொது மேடையில் ரஜினியே சொல்வதை பார்த்திருப்போம். ஆனால் இன்று அவர் அடைந்துள்ள இடம் யாருமே எட்ட முடியாத அளவில் இருக்கின்றது.
நடிகர் விஜய் சேதுபதி: இவரும் ரஜினி மாதிரியே உருவ அமைப்பு இருந்தாலும் ஆரம்பத்தில் துணை நடிகராக நடிக்க வந்தவர். ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையில் ஒரு படத்தில் நடித்தார். ஆனால் நடித்த படங்களை யாரும் வாங்கவில்லை. இயக்குனருடன் சேர்ந்து விஜய்சேதுபதியே வினியோகஸ்தரர்கள் தயாரிப்பாளர்களிடம் என் படத்தை வாங்குங்கள் என்று கெஞ்சியிருக்கிறார். அதில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் உன் மூஞ்சி நடித்த படத்த யாரு வாங்குவா?உன்ன மாதிரி நடிகர்கள் நடிக்கவே வரக்கூடாது என்றெல்லாம் கேலி செய்திருக்கிறார். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் இன்று இந்திய சினிமாவே போற்றத்தக்க நடிகராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி.
நடிகர் விஜய்: தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படம் ஓரளவு கதைகளத்திற்கு சுமாராக ஓடினாலும் அப்பொழுது உள்ள பத்திரிக்கைகள் விஜயை மோசமாக விமர்சித்துள்ளனர். இவரின் தோற்றம், லுக், நிறம் இவைகளை வைத்து கடுமையாக விமர்சித்திருக்கின்றனர். அப்போது அவரது தாயார் தான் கூடவே இருந்து பக்க பலமாக ஆறுதல் கூறி அவர் மனதை தேற்றியிருக்கிறார். இப்பொழுது அதே பத்திரிக்கைகள் தான் அவரை கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் தனுஷ்: தோற்றம், முகம் ஒருத்தனுக்கு முக்கியமில்லை, திறமை இருந்தால் போதும் என்ற வார்த்தைக்கு மிகச்சிறந்த உதாரணமாக இருப்பவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தில் பள்ளி மாணவனாக நடித்த தனுஷ் இவரை பார்த்து கிண்டல் செய்தவர்கள் தான் ஏராளம். அதன் பின் காதல் கொண்டேன் படத்தின் மூலமாக இவரின் நடிப்பு திறமை வெளிப்பட்டது. இன்றைக்கு ஒரு ஹாலிவுட் நாயகனாக வலம் வருகிறார் என்றால் தனுஷின் வெறித்தனமான உழைப்பும் முயற்சியும் தான் காரணம்.