நடிகர்களின் 25வது திரைப்படங்கள்.. யாருக்கு வெற்றி?.. யாருக்கு தோல்வி?.. வாங்க பார்ப்போம்!..

by சிவா |   ( Updated:2024-03-29 08:20:39  )
நடிகர்களின் 25வது திரைப்படங்கள்.. யாருக்கு வெற்றி?.. யாருக்கு தோல்வி?.. வாங்க பார்ப்போம்!..
X

எத்தனை படங்களில் கதாநாயகர்கள் நடித்திருந்தாலும், அவர்களது 25, 50, மற்றும் 100வது படங்கள் அவர்களின் கேரியரில் முக்கிய இடம் பிடிக்கிறது. எம்.ஜி.ஆர் - சிவாஜியில் துவங்கி சிம்பு - தனுஷ் வரை இவர்களது படங்களில் "இருபத்தி ஐந்து" என்கின்ற இலக்கம் முக்கியத்துவம் பெறப்பட்டதாக அமைந்து.

எம்.ஜி.ஆருக்கு 25வது படமாக அமைந்தது சர்வாதிகாரி படம். இப்படம் வெற்றி பெற்றது. சிவாஜிக்கு 25வது படமாக அமைந்த கள்வனின் காதலி படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ரஜினிகாந்துக்கு 25வது படமாக பைரவி அமைந்தது. வில்லனாக தலை காட்டி, தனக்கு கிடைத்த சின்ன சின்ன கதாபாதிரங்களிலும் கூட திறமையாக கையாண்டு முதன் முதலாக ரஜினி கதநாயகனாக மாறியது இந்த படத்தில்தான். படமோ ஹிட். விஜயகாந்துக்கு 25வது படமாக வெளியான நூறாவது நாள் சூப்பர் ஹிட்.

இதையும் படிங்க: அஜித்தின் கால்ஷீட்டை வீணாக்கிய லைக்கா.. இத மட்டும் செய்யலைனா ‘விடாமுயற்சி’ அவ்ளோதான்

'பைரவி' படம் ரஜினியை வேறு ஒரு பரிமாணத்திற்கு எடுத்துச்செல்ல, அடுத்து வந்த 'முள்ளும் மலரும்' போன்ற படங்கள் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. 'களத்தூர் கண்ணம்மாவில்' தனது சிறுவயதில் தனது திரைப்பயணத்தை துவக்கிய கமல்ஹாசன் "மேல் நாட்டு மருமகள்" படத்தின் வாயிலாகத்தான் 25 என்கிற இலக்கத்தை அடைந்தார்.

ஆசை நாயகனாக வலம் வந்து கொண்டிருந்த அஜீத்குமாரை அதிரடி நாயகனாக மாற்றிய அவரின் 25வது படம் "அமர்க்களம்". சரண் இயக்கத்தில் நடித்த அஜீத்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையை சினிமாவில் மட்டும் அல்லாமல் சொந்த வாழ்விலும் கொடுத்தது. ஷாலினி, அஜீத் இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது இந்த படத்தில்தான். பின்னர் இருவரும் திருமணமும் செய்தும் கொண்டார்கள்.

இதையும் படிங்க: கமலுடன் மோதிய அஜித் படங்கள்!.. ஜெயிச்சது தலயா?.. உலக நாயகனா?.. வாங்க பார்ப்போம்!.

விஜயின் 25வது படமாக அமைந்தது ஃபாசில் இயக்கத்தில் வெளிவந்த 'கண்ணுக்குள் நிலவு" அஜீத்குமாரின் மனைவியான நடிகை ஷாலினியே இந்த படத்திலும் கதாநாயகியாக நடித்திருப்பார். "காதலுக்கு மரியாதை" என்ற மிகப்பெரிய வெற்றி படத்திற்கு பின்னர் இவர்கள் இருவரும் நடித்திருந்தனர். இருந்தபோதும் எதிர்பார்த்த வெற்றியை இந்த படம் தரவில்லை. சியான் விக்ரமின் 25வது படம் ராவணன் பெரிய வெற்றியை பெறவில்லை.

சூர்யாவின் "சிங்கம்" படமே இவரின் 25வது படமாகும். படமோ சூப்பர் ஹிட். போலீஸ் அதிகாரியாக மிடுக்கான தோற்றத்தில் நடித்த இந்த படம் இரண்டு, மூன்று பாகங்கள் வரை சென்றது. "சிலம்பாட்டம்" படம் சிம்புவிற்கும், "வேலையில்லா பட்டதாரி" படம் தனுஷிற்கும். "சீதகாதி" விஜய் சேதுபதிக்கும், "வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க" ஆர்யாவிற்கும் 25வது படங்களாக அமைந்துள்ளது, இதனை போலவே ஜெயம் ரவியின் 25வது படம் "பூமி". இதில் வெற்றி பெற்றது தனுஷ் மட்டுமே. கார்த்தியின் 25வது படமான ஜப்பான் படு தோல்வி அடைந்தது.

இதையும் படிங்க: விஜயகாந்தை வைத்து 18 படங்கள்!.. கேப்டனை ஸ்டாராக மாற்றிய எஸ்.ஏ.சந்திரசேகர்..

Next Story