கழட்டுனா மானம் போயிடும்!.. விக் வச்சு பொழப்ப ஓட்டும் பிரபல நடிகர்கள்..
தமிழ் சினிமாவில் இன்று சூப்பர் ஸ்டார்களாக இருக்கும் பல நடிகர்கள் தங்கள் உண்மைத்தன்மையை மறைத்து தான் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது தலையில் முடியில்லாமல் இருக்கும் பல நடிகர்கள் விக் வைத்து தான் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி யார் யாரெல்லாம் தன் வழுக்குத் தலையை மறைத்து விக் வைத்து நடிக்கிறார்கள் என்று தான் பார்க்கப் போகிறோம்.
நடிகர் சத்யராஜ் : ஆரம்பத்தில் இருந்தே விக் வைத்து நடித்தவர் சத்யராஜ். நடிகர்களுக்கு தலைமுடிதான் ஒரு மூலதனம். ஆனால் அந்த முடியே இல்லாவிட்டால் அவர்களுக்கு உரிய தோற்றமே கேலிக் கூத்தாகி விடும். அந்த வகையில் சத்யராஜிற்கு தலையில் சுத்தமாக முடியே கிடையாது. நடிக்கும் போது பெரும்பாலும் விக் வைத்தே நடிப்பார். தேவையில்லாத படங்களுக்கு தன் உண்மையான தோற்றத்திலேயே தோன்றுவார்.
நடிகர் ரஜினி: நம்ம தலைவரை பற்றி உலகத்திற்கே தெரியும். பொது இடங்களுக்கு வரும் போது மட்டுமே ஒரிஜினலான தோற்றத்தில் காணப்படுவார். ஆனால் நடிக்கிற படங்களில் எல்லாம் விக் வைத்தே நடிப்பவர் ரஜினி. இவருக்கும் தலை முடி தான் பிரச்சினை. சுத்தமாக முன்னாடி முடியே இருக்காது.
நடிகர் அரவிந்த்சாமி : ஆணழகன் என்று வர்ணிக்கப்படுபவர். பெண்களை தன் படங்களின் மூலம் வசியப்படுத்தியவர் அரவிந்த் சாமி. அரவிந்த் சாமி மாதிரி மாப்பிள்ளை வேண்டுமென பல பெண்கள் காத்துக் கிடந்த காலம்.அப்பேற்பட்ட ஆணழகனுக்கே தலையில் முடியில்லை என்பது தான் வருத்தம். நடிக்கும் போது விக் பயன்படுத்தி தான் நடிக்கிறார் அரவிந்த்சாமி.
நடிகர் பாக்யராஜ் : வசனகர்த்தா, இயக்குனர், நடிகர் என பன்முகத்திறமைகள் கொண்ட நடிகராக வலம் வந்தவர் நடிகர் பாக்யராஜ். இவர் முக்கால் வாசி விக் வைத்தே நடிப்பவர். இவருக்கும் தலையில் வழுக்கை வந்து விக் வைத்து தான் நடிக்கிறார். ஆனாலும் அவரை பார்க்கும் போது விக் வைத்தார் போல இருக்காது. அந்த அளவுக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கும்.
இதே போல் கவுண்டமணி, செந்தில், ஆனந்த்ராஜ் என பல முன்னனி நடிகர்களுக்கு வழுக்கை விழுந்து விக் வைத்து தான் நடிக்கின்றனர். இவர்களில் யாரும் இதுவரை தன் ஒரிஜினல் தலைமுடியுடன் படங்களில் தோன்றியதே இல்லை என்று தான் கூற வேண்டும்.
இதையும் படிங்க : இதுனாலதான் என் புள்ள இவ்ளோ பெரிய ஆளா இருக்கான்! – டி.ராஜேந்தர் சொன்ன ரகசியம்!..