இவ்ளோ அழகா இருந்தா என்ன பண்றது?.. பெண்களை கொள்ளை கொண்ட தமிழ் நடிகர்களின் பட்டியல்!..

tami_Actors
சினிமாவை பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு வகையான
நடிகர்களை பிடிக்கும். ஒவ்வொருக்கும் ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் இருப்பார்கள். அந்தக் காலத்தில் இருந்தே எம்ஜிஆரின் படங்களை பார்ப்பவர்கள் அவரின் வீரமிகுந்த சண்டைப்பயிற்சிக்கு ரசிகர்களாக இருந்திருப்பார்கள். சிவாஜியின் படங்களை பார்ப்பவர்கள் அவரின் நடிப்பிற்கு ரசிகர்களாக இருந்திருப்பார்கள். அதே போல தான்
இன்றைய காலகட்ட சினிமாவில் பெண்களை கொள்ளை கொண்ட அழகான நடிகர்களைத் தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.
நடிகர் பிரசாந்த் : பிரசாந்தின் வளர்ச்சி அப்போது மாதிரி இருந்திருந்தால் இன்று விஜய் , அஜித் இருக்க வேண்டிய இடத்தில் பிரசாந்த் இருந்திருப்பார். பெண்களை அதிகமாக வசியப்படுத்தியவர் இவர்தான். அழகான தோற்றம், நல்ல நிறம், வசியப்படுத்தும் கண்கள் என பெண் ரசிகைகள் இவர் மீது காதல் வையப்பட்டுத்தான் இருந்தார்கள்.
அதற்கேற்ப தன் படங்களில் காதல் காட்சிகளில் நடிக்கும் போது இப்படி பட்ட ஒரு பையன் நமக்கும் கிடைக்கமாட்டானா? என்று ஏங்கிய பெண்கள் ஏராளம்.

நடிகர் அப்பாஸ் : சொல்லுமளவிற்கு இவரின் ஆளுமை தமிழ் சினிமாவில் இல்லையென்றாலும் வந்த புதிதில் யாருடா இந்தப் பையன்? சினிமாவிற்கு ஏற்ற தகுதியோடு இருக்கிறான் என்பதற்கேற்ப அழகான கட்டுடலோடும் தோற்றத்தோடு பார்ப்பதற்கு அச்சு வார்த்தாற் போல் இருந்தார். குறிப்பிட்ட சில படங்களில் நடித்தாலும் கல்லூரிப் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தார் அப்பாஸ்.

நடிகர் அரவிந்த்சாமி : இவரை பற்றி சொல்லவே வேண்டாம். உனக்கு என்ன மாதிரியான மாப்பிளை வேண்டும் என கேட்கும் பெண்களிடம் பல பேர் சொல்வது எனக்கு அரவிந்த்சாமி மாதிரி தான் மாப்பிளை வேண்டும் என்று. அந்த அளவுக்கு பெண்களை வசீகரப்படுத்தியவர் அரவிந்த்சாமி.அதிலும் ரோஜா படத்தில் அவர் சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள் எல்லாம் மிஸ் பண்ணிட்டோமே என்றுதான் பல பெண்கள் நினைப்பார்கள். அந்த அளவுக்கு ஆணழகனாக வலம் வந்தவர் அரவிந்த்சாமி.

நடிகர் மாதவன் : அலைபாயுதே என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த கல்லூரி பெண்களின் தூக்கத்தை கெடுத்தவர் மாதவன். அவருக்கு ஹைலைட்டே அவரின் புன்னகைதான். தனது சிரிப்பாலேயே அனைவரையும் ஈர்க்கக் கூடியவர். துரத்தி துரத்தி ஷாலினியை காதலிக்கும் காட்சிகளில் ஏம்மா அந்த பையனை இவ்ளோ அலையவிடுற? என்று மாதவனுக்காக உருகிய பெண்கள் ஏராளம். ஒரு சாக்லேட் பாயாக வலம் வந்தவர் தான் மாதவன்.

நடிகர் அஜித் : டான்ஸுக்கு விஜய், அழகுக்கு அஜித் என்றே இன்று விஜய், அஜித்தை ஒப்பிட்டு கூறுவார்கள். ஹேண்ட்ஸாமான ஹீரோ என்று அனைத்து நடிகைகளும் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது தான் ஒரு முழு ஆக்ஷன் ஹீரோவாக மாறியிருக்கிறார். ஆரம்பகால படங்களான காதல் கோட்டை, காதல் மன்னன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற பெரும்பாலான படங்களில் அஜித் மிகவும் சார்மிங்காக அழகாக இப்படியும் ஒரு அழகான நடிகரா? என்று சொல்லுமளவிற்கு மயக்கினார்.

இதையும் படிங்க : டி.ராஜேந்தரிடம் அடுக்குமொழியில் சண்டைபோட்ட கலைப்புலி தாணு… இப்படியா இறங்கி அடிக்கிறது?