Cinema News
அரசியலுக்கு வந்து காணாமல் போன தமிழ் நடிகர்கள்!.. சம்பாதிச்ச காசு எல்லாம் போச்சு!..
சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது நம் நாட்டில் புதிதல்ல. தற்போது கூட விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது தான் ஹாட் டாப்பிக்காக உள்ளது. ஆனால், சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் எல்லாம் முதலமைச்சராகி விடுவதில்லை. பலர் இருந்தே இடமே தெரியாமல் போயிருக்கின்றனர். பலர் அரசியல் கட்சி தொடங்கியதே யாருக்கும் தெரியாது என்று கூறலாம். அப்படி நாட்டை ஆளும் ஆசையில் அரசியல் கட்சி தொடங்கி பல்பு வாங்கிய தமிழ் சினிமா நடிகர்களை பற்றி இந்த பதிவில் பார்க்காலம்.
சிவாஜி கணேசன்
நடிகர் சிவாஜி கணேசன் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். பின்னர் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற தனிகட்சியும் துவங்கினார். ஆனால் அதுவும் எடுபடவில்லை. இவர் சினிமாவில் சம்பாதித்த தனது சொந்த பணத்தை அரசியலில் போட்டு பணத்தை இழந்தார்.
கார்த்திக்
நடிகர் கார்த்திக்கிற்கு தன்னுடைய சமுதாயத்தை சேர்ந்த ரசிகர்கள் அதிகம் என்பதால், அதை நம்பி மனித உரிமை காக்கும் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்தார். ஆனால் அவரால் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை. அதன் பின்பும் கூட வேறு பெயரில் கட்சி தொடங்கினார். ஆனாலும் கூட அரசியல் இருந்த இடமே தெரியாமல் போய்விட்டார் நடிகர் கார்த்திக்.
சரத்குமார்
நடிகர் சரத்குமார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சியை தொடங்கி பல வருடங்களாக நடத்தி வருகிறார். எனினும் அவரால் பெரிய அளவில் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. எனவே தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
டி.ராஜேந்தர்
இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்ட டி.ராஜேந்தர் தாயக மறுமலர்ச்சி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். ஆனால் அவரால் அரசியலில் சாதிக்க முடியவில்லை. இதனால் கடுப்பாகி சில ஆண்டிலேயே அவர் அந்த கட்சியை கலைத்துவிட்டார்.
விஜயகாந்த்
பல நடிகர்கள் அரசியலுக்கு வந்ததே யாருக்கும் தெரியாது. ஆனால் நடிகர் விஜயகாந்த் அரசியலுக்கு வந்து, ஆரம்பத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்தார். 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜயகாந்த், அதிமுக, திமுகவிற்கு மாற்றாக இருப்பார் என்று பலரும் நம்பினார்கள். ஆனால் சில சில வருடங்களிலேயே அவரும் காணாமல் போய்விட்டார். தற்போது அவரது உடல்நிலையும் மோசமாக இருப்பதால், அந்த கட்சியின் நிலையும் கேள்விக்குறியாக தான் உள்ளது. நடிகர் விஜயகாந்த் தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் கொட்டி கட்சி தொடங்கினார்.
பாக்யராஜ்
இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ், எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அவர் கட்சி தொடங்கினார் என்பதே பலருக்கு தெரியாது என்று கூறலாம். சினிமாவில் பல வெற்றிகளை கண்ட பாக்யராஜ் அரசியலில் தோல்வியா தான் கண்டார்.
கமல்ஹாசன்
சினிமாவில் நினைத்து பார்க்க முடியாத பல புதிய முயற்சிகளை செய்து, வாயை பிளக்க வைத்த கமலஹாசனே அரசியலில் மண்ணை தான் கவ்வினார். இவர் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கி, கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர். தற்போது அவர் கட்சியை மறந்துவிட்டு, முழு நேரமும் சினிமாவில் நடித்துக்கொண்டும், பிக் பாஸில் கவனம் செலுத்திக்கொண்டும் இருக்கிறார். கமல்ஹாசனும் சொந்த பணத்தை கட்சிக்கு செலவு செய்து பணத்தை இழந்தவர் தான்.