Cinema News
அகங்காரத்தால் அழிந்த நடிகர்கள்!.. வாய்ப்புகள் வந்தும் பயன்படுத்த தவறிய தமிழ் பிரபலங்கள்!..
தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை அடைய கலைஞர்கள் படும் பாடு இருக்கிறதே சொல்லி மாளாது. கடும் முயற்சி, உழைப்பை போட்டு நடிகர் என்ற அந்தஸ்தை அடைந்தவுடன் தன்னுடைய போக்கையே மாற்றிக் கொள்ளும் நடிகர்கள் சிலர் இருக்கிறார்கள். அந்த வகையில் பெரும் உச்சத்தை அடைந்த நடிகர்கள் இன்று அவர்கள் இருந்த அடையாளமே தெரியாத அளவுக்கு மறைந்து கிடக்கிறார்கள்.
அந்த வகையில் முதலாவதாக நடிகர் சந்திரபாபுவை குறிப்பிடலாம். மேற்கத்திய கலாச்சாரங்களை தான் நடிக்கும் படங்களில் புகுத்தியவர் சந்திரபாபு. ஆங்கில படங்கள் பலவற்றை சிவாஜியை பார்க்க வைத்து அவர்கள் நடிப்பையும் சிவாஜியிடம் காட்டியவர் சந்திரபாபு. தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்ற சந்திரபாபு இடையிலேயே படங்கள் தயாரிக்கவும் இயக்கவும் ஆரம்பித்தார். ஆனால் அந்த படங்கள் எதுவுமே சரியான ரிசல்ட்டை கொடுக்க வில்லை. அதன் பின் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி அவருக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தித் தந்தும் அதை சந்திரபாபு சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.
இரண்டாவது மைக் மோகன். ஒரு கட்டத்தில் ஹிந்தி , கன்னடம் என கமல் பாம்பே பக்கம் போனதும் அந்த இடத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டவர் தான் மைக் மோகன். கமலுக்கு ஏற்கெனவே பெண் ரசிகைகள் ஏராளம். அவருக்கு பிறகு அந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டார் மைக் மோகன். வெள்ளிவிழா நாயகன் என்றே அவரை அழைப்பர் தமிழ் சினிமாவில். அவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுப்பவர் நடிகர் விஜயின் தாய்மாமாவும் பாடகருமான சுரேந்திரன் தான். சுரேந்திரன் ஒரு சமயம் நான் மைக் மோகனுக்கு வாய்ஸ் கொடுக்கிறேன் என்று சொன்னதும் மோகனுக்கு கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் பின் சொந்தக் குரலிலேயே பேச ஆரம்பித்திருக்கிறார். ஆனால் அந்த படங்கள் எதுவுமே ஓடவில்லை என்பது தான் குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக ராமராஜன். ரஜினி, கமல் ,விஜயகாந்திற்கு அடுத்தபடியாக மக்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்றவர் நடிகர் ராமராஜன். கிராமத்து நாயகனாகவே வலம் வந்த ராமராஜன் அதிமுகவில் இணைந்திருந்தார். ஒரு கட்டத்தில் எம்ஜிஆரை எப்படி பார்க்க ஆரம்பித்தார்களோ அதே நிலையில் தான் ராமராஜனையும் மக்கள் பார்க்க தொடங்கினார்கள். அதன் பின் நடிகை நளினியை விவாகரத்து செய்தது, அதிமுகவில் இருந்து பிரிந்தது என தன் செல்வாக்கை இழந்தார். படங்களின் வாய்ப்புகளும் குறைய தொடங்கியது. சிறிது காலத்திற்கு பிறகு வில்லனாக நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வந்திருக்கிறது. நடித்தால் ஹீரோ தான் என்று அப்படியே இருந்துவிட்டாராம்.
நடிகர் கார்த்திக். நவரச நாயகனாக மக்கள் மனதில் பதிந்தவர் நடிகர் கார்த்திக். ஆணுக்கு உண்டான அத்தனை அம்சமும் கொண்ட அழகு நாயகனாக வலம் வந்தார் கார்த்திக். ஆனால் இடையிடையே சூட்டிங்கிற்கு சரியான நேரத்தில் வராமை, திடீரென்று வேறு எங்கேயாவது சென்று விடுவது என்பது மாதிரியான செய்கையால் தயாரிப்பாளர், இயக்குனர்களின் அதிருப்திக்கு ஆளானார். இதில் தனியே கட்சியை ஆரம்பித்து அதிலும் மொத்த் செல்வாக்கை இழந்தார் கார்த்திக். இந்த தகவல்களை பயில்வான் ரெங்கநாதன் அவரது யுடியூப் சேனலில் தெரிவித்திருக்கிறார்.