முதல் படமே கில்மா படம்!.. அந்த மாதிரி படத்தின் மூலம் அறிமுகமான டாப் நடிகர்கள்!..
சினிமாவில் சாதிக்க வரும் ஒவ்வொரு கலைஞனுக்கும் முதல் படம் எத்தனை வருடமானாலும் மக்கள் மனதில் நீங்கா வண்ணம் இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். உதாரணமாக சிவாஜிக்கு ‘பராசக்தி’ படம் அமைந்ததை போல. ஆனால் இப்போது நாம் பார்க்க இருக்கும் நடிகர்கள் ஐய்யயோ அந்தக் கதையை ஏன் கேட்குறீங்க? என்பதை போல முதல் படத்திலேயே சகட்டு மானக்கி பலான காட்சிகளில் நடித்து ரசிகர்களை முகம் சுழிக்க வைத்திருக்கின்றனர்.
நடிகர் ஆதி : தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஓரளவுக்கு மக்கள் மனதை வென்றவர் நடிகர் ஆதி. இவர் அறிமுகமான முதல் படம் ‘மிருகம்’. எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான சில காட்சிகள் இந்தப் படத்தில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் காட்டு மிராண்டி போல ஆதி இந்தப் படத்தில் பலான வார்த்தைகளில் பேசுவது, அந்த மாதிரி காட்சிகளில் நடிப்பது என ரசிகர்களையே முகம் சுழிக்க வைத்திருப்பார். ஆனால் அதன் மூலம் பிரபலமாகி ஒரு சில நல்ல படங்களையும் கொடுத்திருக்கிறார்.
நடிகை அமலா பால்: தமிழில் இப்போது ஒரு நடிகையாக தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலாபால். இவர் அறிமுகமான முதல் படம் ‘சிந்து சமவெளி’. இந்தப் படத்தில் மாமனாருக்கும் மருமகளுக்கு இடையே ஏற்படும் அந்த காம ஆசைகளை மையப்படுத்தி அமைந்திருக்கும் படம் தான் சிந்து சமவெளி. படத்தைப் பார்த்து காரித் துப்பாதவர்களே இல்லை. அந்த அளவுக்கு காட்சிகளை இயக்குனர் சாமி வெளிக்காட்டியிருப்பார். ஆனால் அதன் பிறகு மிகவும் கஷ்டப்பட்டு ஒரு நிலையான இடத்தை அடைந்திருக்கிறார் அமலா பால்.
நடிகர் துருவ் விக்ரம்: நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் அறிமுகமான முதல் படத்திலேயே தனது ருத்ர தாண்டவத்தை ஆடியிருப்பார். ‘ஆதித்ய வர்மா’ படத்தில் எந்த அளவுக்கு பலான காட்சிகளை காட்ட முடியுமோ அதற்கும் மேலாக அதுவும் தமிழ் சினிமாவில் இப்படியும் ஒரு படமா? என்று கேட்கிற அளவுக்கு வெளிப்படையாக காட்டியிருப்பர். தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்து தெலுங்கில் மட்டும் தான் காட்டுவீங்களா? நாங்களும் காட்டுறோம் என்றளவுக்கு படுமோசமாக காட்சிகளை வடிவமைத்திருப்பர்.
நடிகர் தனுஷ்: இன்று தமிழ் சினிமாவே கொண்டாடப்படும் நடிகராக தனுஷ் இருந்தாலும் முதல் படத்தை பார்த்த ரசிகர்கள் ‘ஏண்ட்டா இதெல்லாம் உனக்கு தேவையா?’ என்று கேட்கும் அளவிற்கு இறங்கி நடித்திருப்பார். கிட்டத்தட்ட ஆம்பள ஷகீலா என்றே பல பத்திரிக்கைகளில் தனுஷை வச்சு செய்தனர். இளசுகளுக்கிடையே எப்படி ஆசை தூண்டப்படுகிறது என்பதை தெளிவாக கூறியிருப்பார் செல்வராகவன்.
நடிகர் ஹரீஷ் கல்யாண்: இவர் நடித்த முதல் படமும் ‘சிந்து சமவெளி’ திரைப்படம் தான். ஆனால் படத்தில் இவருக்கு நல்ல கதாபாத்திரம் என்றாலும் படத்தின் கதையால் அப்போது இவரும் காண்ட்ரவர்சியில் சிக்கினார். சில காட்சிகளில் இவரும் அமலாபாலும் காட்டும் நெருக்கம் சற்று கூச வைத்தது. இருந்தாலும் சமீபகாலமாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஹரீஷ் கல்யாண்.
இதையும் படிங்க : ‘வரலாறு’ படத்திற்காக அஜித் பட்ட கஷ்டம்!.. வெற்றிக்கு பின்னாடி இருக்கும் ஒரு சோகமான சம்பவம்..