காலம் போன காலத்துல குழந்தை பெற்றுக்கொண்ட பிரபலங்கள்- அட கடவுளே.. இத்தன பேரா..

Published on: July 22, 2023
---Advertisement---

பல சினிமா நடிகர், நடிகைகள் இளமை காலத்தில் படங்களில் நடிப்பதிலேயே கவனம் செலுத்திவிட்டு, சொந்த வாழ்க்கையை தாமதமாக தொடங்குகின்றனர்.  40 வயதிற்கு பிறகு திருமணம் செய்துகொள்கின்றனர், குழந்தை பெற்றுக்கொள்கின்றனர். அப்படி காலம் போன காலத்தில் குழந்தை பெற்றுக்கொண்ட தமிழ் சினிமா நடிகர், நடிகைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

ராதிகா, சரத்குமார் 

radhika

நடிகை ராதிகாவும், நடிகர் சரத்குமாரும் கடந்த 2001ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு 2004ம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறந்த போது, சரத்குமாருக்கு வயது 51. ராதிகாவிற்கு வயது 42. 

ரேவதி

revathi

நடிகை ரேவதி ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறார் என்று பலர் நினைத்துக்கொண்டிருப்பீர்கள். ஆனால் அது உண்மை இல்லை. நடிகை ரேவதி தன்னுடை கணவர் சுரேஷ் சந்திர மோகனை கடந்த 2002ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் தனியாக வாழ்ந்து வந்த ரேவதிக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதனையடுத்து தனது 47வது வயதில் டெஸ்ட் டியூப் வழியாக கருவுற்று குழந்தை பெற்றுள்ளார். இது பற்றி அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

நீலிமா ராணி

neelima

சிறு வயதில் இருந்தே தேவர் மகன் உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நீலிமா ராணி, அதன் பிறகு மெட்டி ஒலி, தென்றல் உள்ளிட்ட பல சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு இரண்டாது முறையாக கருவுற்று பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்திருந்தார். அப்போது இவருக்கு வயது 39.

சந்திரா லக்ஷ்மன்

serial actres

காதலிக்க நேரமில்லை சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் சந்திரா லக்ஷ்மன். அதன் பிறகு பல சீரியல்களில் நடித்த இவர் 40 வயதில் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.

பிரகாஷ் ராஜ்

prakash raj son

நடிகர் பிரகாஷ் ராஜ் முதல் மனைவியை விவாகரத்து செய்த பிறகு போனி வர்மா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். முதல் மனைவிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் போனி வர்மா இவரின் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அப்போது இவருக்கு வயது 50.

பிரவு தேவா 

prabhu deva

பிரவு தேவா முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, நயன்தாராவை காதலித்து வந்தார். அதன் பிறகு அவர்கள் பிரிந்து விட்டனர். பல ஆண்டுகள் கழித்து மருத்துவர் ஹிமானி சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டார் பிரபு தேவா. இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரவு தேவாவிற்கு தற்போது 50 வயதாகிறது.

prabhanjani

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.