20 வயதில் 60 வயது கதாபாத்திரத்தில் நடித்த திரைப்பிரபலங்கள்!.. இருந்தா இவங்கள மாதிரி இருக்கனும்..
தமிழ் சினிமாவில் புதுமுகங்களின் வரவு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அதுவும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சொந்த ஊரிலிருந்து கிளம்பி வந்து விடுகின்றனர். இன்றைய பல முன்னனி இயக்குனர்கள் ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டு சூழ்நிலை காரணமாக இயக்குனர்களாக மாறியிருக்கின்றனர்.
ஆனால் இப்போது நாம் பார்க்க இருக்கும் பிரபலங்கள் 20 வயதிலேயே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றனர். மேலும் அவர்கள் நடித்த அந்த கதாபாத்திரம் தான் அவர்களை சினிமாவில் நிலைத்து நிற்க உதவியது.
நடிகர் வி.கே.ராமசாமி: பாய்ஸ் நாடகக் கம்பெனியில் இருந்து சினிமாவிற்குள் வந்தவர் வி.கே.ராமசாமி. ப. நீலகண்டன் எழுதிய ‘ நாம் இருவர் ’ என்ற நாடகத்தில் வி.கே.ராமசாமி ப்ளாக் மார்க்கெட் சண்முகம் பிள்ளை என்ற 60 கிழவனாக நடித்தார். அப்போது அவருக்கு வயது 19 தான். இந்த நாடகத்தைப் பார்க்க வந்த மெய்யப்பச்செட்டியார் அதை படமாக்க விரும்ப அந்த கதாபாத்திரத்தில் வி.கே.ராமசாமி தான் நடிக்க வேண்டும் என கூறி படத்திலும் ராமசாமியையே நடிக்க வைத்தார். அப்போது அவருக்கு வயது 21. அது முதலே எல்லா படத்திலும் முதியவராக தந்தையாக நடித்து சிறந்த குணச்சித்திர நடிகராகவே வாழ் நாள் முழுவதும் வலம் வந்தார்.
நடிகர் நெப்போலியன்: புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் நெப்போலியன். அந்தப் படத்தில் 60 வயது கிழவனாகத்தான் நடித்டிருப்பார். ஆனால் அப்போது அவருக்கு வயது 20 தானாம். ஆனால் முதியவர் தோற்றத்தில் கனகச்சித்தமாக பொருந்தியிருப்பார். மேலும் அந்த படத்தில் அவருக்கு சரியான கதாபாத்திரம் கூட. அதிக வரவேற்பை பெற்றார்.அது முதலே தொடர்ச்சியாக பல படங்கள் அவரை தேடி வந்தன.
இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் நாவலை சீரியலாக்க திட்டம்!.. பூஜை போட்டது யாருனு தெரியுமா?.. சேனல்களுக்கிடையே நடந்த போட்டி..
நடிகை கோவைசரளா: தமிழ் சினிமாவில் மனோரமாவை எப்படி கொண்டாடுகிறார்களோ அதே அளவுக்கு பெருமையை பெற்று விளங்குபவர் நடிகை கோவை சரளா. முந்தானை முடிச்சு படத்தில் முதன் முதலில் அறிமுகமானார். அதன் பின் தொடர்ச்சியாக சின்ன சின்ன ரோல்களில் நடித்த கோவைசரளா சின்னவீடு படத்தில் 60 வயது கிழவியாக பாக்யராஜிற்கு அம்மாவாக நடித்து அசத்தியிருப்பார். அப்போது அவருக்கும் 20 வயதைத்தான் எட்டியிருக்கும். ஆனால் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.