நடிக்க தெரிந்தும் மார்கெட் இழந்த நடிகர்கள்!.. அட நல்ல பின்னனி இருந்தும் இப்படி ஆயிடுச்சே!..
தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதே அரிது. அப்படி கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும். இன்று பல பேர் சினிமாவில் கோலோச்சி நிற்கிறார்கள் என்றால் அவர்களுக்கு பின்னாடி நிறைய போராட்டங்கள் இருக்கின்றன.
அதுவும் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனி ஆளாக ஜெயித்த நடிகர்களும் இருக்கிறார்கள். வாரிசு நடிகர்களும் வந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தன் வெற்றியை நிலை நாட்டிக் கொண்டும் இருக்கின்றனர். அந்த வகையில் பின்புலத்தில் வெயிட்டான பின்னனியை வைத்திருந்தும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளாமல் இன்று காணாமல் போன நடிகர்களும் இருக்கிறார்கள்.
அவர்களில் குறிப்பிடத்தக்க இரண்டு பேரை மட்டும் பார்க்க போகிறோம். முதலாவதாக நடிகர் வினித். இவர் நாட்டிய பேரொளி பத்மினி குடும்பத்தில் இருந்து வந்தவர். சினிமாவில் நடிக்க வந்து பல நல்ல நல்ல திரைப்படங்களில் நடித்து வந்தார். நன்றாக நடிக்கக் கூடிய நடிகரும் ஆவார். காதல் தேசம், கரிசக்காட்டு பூவே, சந்திரமுகி போன்ற ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க : எம்ஜிஆருக்காக கலைஞரையே எதிர்த்த சிவாஜி!.. நட்புக்கு உதாரணமாக இருந்த ஒரு நிகழ்வு!..
இயல்பாகவே பரதம் , கதக்களி இவற்றில் கைதேர்ந்தவர் வினித். வாய்ப்புகள் வந்தும் இவரின் நடனத்திற்கு வெளி நாட்டில் இருந்து அழைப்பு வரும் போதெல்லாம் பட சூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு பறந்து விடுவாராம். அதனாலேயே வந்த வாய்ப்புகளும் பறி போயிருக்கிறது. அடுத்ததாக நடிகர் ஆனந்த்பாபு. நகைச்சுவை மன்னன் நாகேஷின் மகனான ஆனந்த்பாபு தமிழ் சினிமாவில் நாகேஷ் மாதிரியே பெரிய இடத்திற்கு வருவார் என்று எதிர்பார்த்தனர்.
ஆனால் மதுபழக்கத்துக்கு அடிமையானதால் சினிமாவில் அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை. மதுவுக்கு பைத்தியம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அடிமையாகியிருக்கிறார். அதனால் வந்த விளைவு மூளையில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிக்ச்சை வேற பெற்று வந்தாராம். இதனாலேயே அவரின் மார்கெட்டும் சரிந்தது.