தமிழில் இருந்து ஹாலிவுட்டுக்குப் போன டாப் நடிகர்கள்… லிஸ்ட்டை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க!!
தமிழ் சினிமாவில் இருந்து ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோர் ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார்கள் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். ஆனால் நமக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக இன்னும் பல தமிழ் நடிகர்கள் ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் யார் யார் என்பது குறித்தும், அந்த நடிகர்கள் நடித்த திரைப்படங்களை குறித்தும் இப்போது பார்க்கலாம்.
1.மாதவன்
2000 ஆம் ஆண்டு வெளியான “அலைபாயுதே” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாதவன். ஆனால் அதற்கு முன்பே ஹாலிவுட்டில் அறிமுகமாகிவிட்டார். ஆம்!
1998 ஆம் ஆண்டு உருவான “இன்ஃபர்னோ” என்ற ஆங்கில திரைப்படத்தில் மாதவன் நடித்திருக்கிறார். இதில் ஒரு இந்தியாவைச் சேர்ந்த போலீஸ் கதாப்பாத்திரத்தில் மாதவன் நடித்திருந்தார்.
2.பிரகாஷ் ராஜ்
தமிழ் மட்டுமல்லாது இந்திய சினிமாவின் முன்னணி வில்லன் நடிகராக திகழ்ந்து வரும் பிரகாஷ் ராஜ், 1993 ஆம் ஆண்டு “டிராப்பிகல் ஹீட்” என்ற ஆங்கில திரைப்படத்தில் ஒரு இந்திய போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
3.நித்யா மேனன்
தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நித்யா மேனன், கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான “ஹனுமன்” என்ற ஆங்கில திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
4.நெப்போலியன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நெப்போலியன், அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் என்ற தகவலை நாம் அறிவோம். மேலும் அவர் நான்கு அமெரிக்க திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான “டெவில்ஸ் நைட்: டான் ஆஃப் தி நெயன் ராக்” என்ற ஆங்கில திரைப்படத்தில் ஒரு அருங்காட்சியக பாதுகாவலராக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அதே ஆண்டில் வெளியான “கிருஸ்துமஸ் கூப்பன்” என்ற ஆங்கில திரைப்படத்திலும் நெப்போலியன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதே போல் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான “ஒன் மோர் டிரீம்” என்ற திரைப்படத்தில் பள்ளி முதல்வராக நடித்திருக்கிறார். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த “டிராப் சிட்டி” என்ற திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் நெப்போலியன்.
5.ஜிவி பிரகாஷ்
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் திகழ்ந்து வரும் ஜிவி பிரகாஷ் குமார், கடந்த 2022 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான “டிராப் சிட்டி” என்ற திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் நெப்போலியனும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
6.எம்.என்.நம்பியார்
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்த எம்.என்.நம்பியார் 1952 ஆம் ஆண்டு வெளியான “தி ஜங்கில்” என்ற ஆங்கில திரைப்படத்தில் ஒரு அமைச்சராக நடித்திருக்கிறார்.