தெய்வீக காதலுக்கும் மேல.. “அவள் இல்லாமல் வாழ முடியாது” – விவாகரத்து ஆன நடிகரை காதலிக்கும் பிரபல தமிழ் நடிகை!

Published On: April 15, 2025
| Posted By : Giri

தமிழில் பிரபல நடிகையாக வலம்வந்த லேகா வாஷிங்டன் ஏற்கனவே விவாகரத்தான நடிகரை காதலித்து வரும் செய்தி வெளியாகியுள்ளது.

தமிழில் பிரபல நடிகையாக வலம்வந்தவர் லேகா வாஷிங்டன், 1987 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவரது முன்னோர்கள் இத்தாலி மற்றும் மகாராஷ்டிராவில் பிறந்தவர்கள். இவரது அம்மா மகாராஷ்டிராவில் பிறந்தார். இதனால் லேகா தமிழ், மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். அவர் தனது கல்லூரி படிப்பை சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் முடித்தார்.

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, SS மியூசிக் சேனலில் வீடியோ ஜாக்கியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர், 1999 ஆம் ஆண்டு வெளியான ‘காதலர் தினம்’ படத்தில் ‘ஓ மரியா’ பாடலில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2004 ஆம் ஆண்டு ‘யுவா’ என்ற இந்தி படத்தில் ஒரு தூதுவராக கேமியோ ரோல் செய்தார். 2007 ஆம் ஆண்டு சிலம்பரசன் நடித்த ‘கெட்டவன்’ படத்தில் பிராமின் பெண்ணாகவும், ‘உன்னாலே உன்னாலே’ படத்திலும் சிறு காட்சியில் நடித்தார்.

ஒன்பது வருடங்களாக கேமியோ ரோல்களில் மட்டுமே இருந்த லேகா, 2008 ஆம் ஆண்டு ‘ஜெயம்கொண்டான்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, விஜய் விருதில் சிறந்த துணை நடிகர் விருதுக்குத் தேர்வானார். பின்னர், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் போன்ற மொழிகளில் மொத்தம் 15 படங்களில் நடித்தார். அவரது கடைசி படம் 2015 இல் வெளியான தெலுங்கு படமான ‘டைனமைட்’. 2017 இல் ‘ரங்கூன்’ என்ற ஹிந்தி படத்திற்கு பாடலாசிரியராக பணியாற்றினார்.

ஐபிஎல் முதல் சீசனில் தொகுத்து வழங்கிய பெருமை லேகாவுக்கே சேரும். இதற்காக கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட்டர்களைப் பற்றி தகவல்கள் திரட்டி தெரிந்துகொண்டார். முன்னாள் கிரிக்கெட்டர் அஜய் ஜடேஜா அவருக்கு உதவினார். இதன் மூலம் லேகா சிறந்த தொகுப்பாளராக மக்களின் மனதில் இடம்பிடித்தார், மேலும் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் கிடைத்தன.

இப்போது, 37 வயதான லேகா, நடிகர் அமீர்கானின் உறவினர் இம்ரான் கானை காதலித்து வருகிறார். இத்தனை நாட்களாக இந்த காதல் குறித்து இருவரும் பேசாத நிலையில் தற்போது காதலை உறுதிப்படுத்தி இம்ரான் கான் பேசியுள்ளார். அதில், கொரோனா காலத்தில் தான் இருவரும் பேசத் தொடங்கியதாகவும், அந்த நேரத்தில் லேகா தனக்கு பல உதவிகளை செய்ததாகவும் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பேட்டியில், இம்ரான் கான், லேகா வாஷிங்டன் தான் தனது வாழ்க்கையில் பாசிட்டிவிட்டியையும் மற்றும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்த காரணமாக இருந்தார் என்று தெரிவித்துள்ளார். அதே பேட்டியில் “நான் மன அழுத்தத்தில் இருந்தபோது லேகா தான் எனக்கு உதவினார். லேகா இல்லாமல் வாழ முடியுமா என்று தெரியவில்லை” எனக் கூறியிருக்கிறார்.

இப்படி தெய்வீக காதலாக நினைத்து காதலித்துக் கொண்டிருக்கும் இம்ரான் கான் ஏற்கனவே அவந்திகா என்பவரை 2011-ல் திருமணம் செய்தவர். இந்த ஜோடிக்கு ஒரு குழந்தையும் பிறந்த நிலையில், 2019-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர். பிறகு தான் கொரோனா தொற்றால் உலகம் முடங்கி இருந்த வேளையில் லேகாவை சந்தித்து தெய்வீக காதலாக அது மாறியிருக்கிறது.