கொஞ்சம் அசந்தா நம்மள காலி பண்ணிடுவாங்க.. நடிகையை உஷாராக டீல் செய்த சிவாஜி!..

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே பெரிய நடிகராக கருதப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசனை பொருத்தவரை அவரது காலகட்டத்திலும் சரி அதற்கு பிறகு உள்ள காலகட்டத்திலும் சரி அவருக்கு இணையான ஒரு நடிகர் இல்லை என்று இப்போது இருக்கும் தலைமுறைகளே கூறுவதை கேட்க முடியும்.
அந்த அளவிற்கு பலவிதமான நடிப்புகளை வெளி காட்டக் கூடியவராக சிவாஜி கணேசன் இருந்தார். அதேபோல நடிகைகளை பொருத்தவரை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய நடிகையாக சாவித்திரி பார்க்கப்பட்டார். எனவேதான் அவருக்கு நடிகையர் திலகம் என்கிற பட்டம் கொடுக்கப்பட்டிருந்தது.

sivaji2
ஆனால் சாவித்திரியை தாண்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு நடிகையும் இருந்தார். அவர்தான் நடிகை பானுமதி. 1956 ஆம் ஆண்டு பானுமதியும் சிவாஜி கணேசனும் சேர்ந்து ரங்கோன் ராதா என்கிற திரைப்படத்தில் நடித்தனர்.
நடிகையின் நடிப்பு:
இந்த திரைப்படத்திற்கான திரைக்கதையை கலைஞர் எழுதியிருந்தார். என்.எஸ். கிருஷ்ணன் உட்பட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடிக்கும் போது சிவாஜியின் நடிப்பை மீறி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் பானுமதி.

Rangoon_Radha
பிறகு ஒரு பேட்டியில் சிவாஜி பானுமதி குறித்து கூறும் பொழுது பானுமதி உடன் நடிக்கும் போது மட்டும் மிகவும் உஷாராக நடிக்க வேண்டும் இல்லை எனில் அவர்கள் நம்மளையே காலி பண்ணிடுவாங்க என கூறினார். அந்த அளவிற்கு சிறப்பாக நடிக்க கூடியவராக பானுமதி இருந்துள்ளார்.