Connect with us

Cinema News

சூர்யா மீது கடுங்கோபத்தில் தமிழ் நடிகைகள்.. எங்கள பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது.?!

தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம், ஒரு படங்களில் நடிக்க தமிழ் நடிகைகளை தவிர்த்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் உள்ள நடிகைகளை தான் படத்தில் நடிக்க வைக்க நடிகர்கள் மும்மரம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், விஜய் கூட, மாஸ்டரில் மாளவிகா மோகன், பீஸ்ட்டில் பூஜா ஹெக்டே, வாரிசு படத்தில் ரஷ்மிகா என வெளிமாநில நடிகைகளை தேர்வு செய்து வருகிறார்.

இப்போது அதே பாணியை தான் நடிகர் சூர்யாவும் கையில் எடுத்துள்ளார். ஏனென்றால், சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் நடித்து வரும் வணங்கான் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி தான் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் சூர்யா தமிழ் நடிகையை தேர்வு செய்யாமல், பஞ்சாபி நாட்டை சேர்ந்த ஒரு நடிகையை தேர்வு செய்துள்ளாராம். ஆம், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியானது.

இதையும் படியுங்களேன்- விஜய்-அஜித் ரசிகர்களை மிஞ்சிய சிம்பு ரசிகர்கள்… மதுரையை அதிர வைத்த அந்த சம்பவம் இதோ…

அதன்பின், ஒரு சில காரணங்களால், அப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரபல ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் சில திரைப்படங்களில் நடித்து பிரபலமான மஹிரா ஷர்மா நடிக்கவுள்ளாராம்.

தொடர்ந்து, வெளிமாநில நடிகைகளே தன்னுடைய படத்திற்கு சூர்யா தேர்வு செய்து வருவதால், தமிழில் உள்ள சில நடிகைகள் சூர்யாவின் மீது அதிருப்தியில் இருக்கிறார்களாம் . இதனை பார்த்த நெட்டிசன்கள் தமிழ் கதாநாயகிகளா இல்லை என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

google news
Continue Reading

More in Cinema News

To Top