பேரழகுதான்! ஹீரோயின்களையே மிஞ்சும் நடிகைகளின் வாரிசுகள்

Published on: July 31, 2023
kushboo
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த முன்னனி நடிகைகள் இப்போது குணச்சித்திர வேடங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர். அந்த வகையில் அவர்கள் குழந்தைகளும் சினிமாவில் அடியெடுத்து வைப்பதற்கான ஏராளமான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்யும். அதில் அழகான மகள்களாக இருந்தால் சொல்லவா வேண்டும்? கண்டிப்பாக சினிமாவில் நுழைய அதிக வாய்ப்பிருக்கும். அந்த வகையில் அழகான மகள்களை பெற்ற நடிகைகளைத்தான் இந்த லிஸ்ட்டில் பார்க்க போகிறோம்.

நடிகை நதியா : 80களில் முன்னனி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை நதியா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் கலக்கி வந்தவர். க்ளாமரே இல்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர். அதன் பின் ஒரு தொழிலதிபரை மணந்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். அங்கிருந்து வேறொரு நாட்டிற்கு குடிபெயர்ந்தாராம். நீண்ட நாள்கள் கழித்து ஒரு கம்பேக் கொடுத்தார். அவ்ளோதான். மற்ற நடிகைகள் ஆச்சரியப்பட்டுப் போனார். ஏனெனில் இரண்டு மகள்களை பெற்றவர். ஒரு  முதிர்ச்சியான தோற்றத்தில் வருவார் என்று பார்த்தால் அதே பூவே பூச்சூடவா நதியா ரேஞ்சுக்கே வந்திறங்கினார். அவருடைய இரண்டு மகள்களும் நதியாவையே மிஞ்சிருவார்கள் போல. அப்படி அழகு. கூடிய சீக்கிரம் அவர்களையும் சினிமாவில் எதிர்பார்க்கலாம்.

nadhiya
nadhiya

நடிகை ரோஜா : செம்பருத்தி படத்தின் மூலம் தமிழில் முதன் முதலில் அறிமுகமானவர் நடிகை ரோஜா. முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து பல படங்களில் அதுவும் முன்னனி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்து சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார். இப்போது ஆந்திராவில் ஒரு தைரியமான அரசியல்வாதியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார். இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன். மகள் சினிமாவிற்குள் வருவார் என்று எதிர்பார்ந்திருந்த நிலையில் அவருக்கு வெறொரு துறையில் ஆர்வமாம். இந்த சிறு வயதிலேயே ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறாராம் ரோஜாவின் மகள். இவரும் பார்ப்பதற்கு சின்ன வயது ரோஜாவை போல் அழகாகத்தான் இருப்பார்.

இதையும் படிங்க : அஜீத்கிட்ட அது எனக்கு பிடிக்கல.. சொல்லவும் முடியல!.. பல வருடங்கள் கழித்து பேசிய தமன்னா…

roja
roja

நடிகை கௌதமி : கமல், ரஜினி ஆகியோருடன் ஒரு காலத்தில் டூயட் பாடி ரசிகர்களின் பேராதரவை பெற்றாவர் நடிகை கௌதமி. அவர்கள் மட்டுமில்லாமல் சத்யராஜ், பிரபு, கார்த்திக் என அனைத்து முன்னனி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்த கௌதமிக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார். கணவரை விவாகரத்து செய்து ஒரு சிங்கிள் பேரண்டாக தன் மகளை கவனித்து வருகிறார். துருவ் விக்ரமுக்கு முதலில் ஜோடியாக பேசப்பட்டது கௌதமியின் மகளைத்தான். ஆனால் அப்போது மிகவும் சிறுவயதாக இருந்ததனால் நடிக்க முடியவில்லையாம். இவரும் பார்ப்பதற்கு ஹோம்லியாக அழகாக இருப்பதால் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் சுற்றிக் கொண்டே வருகிறார்கள்.

gauthami
gauthami

நடிகை சரண்யா பொன்வன்னன் : தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகைகளில் சரண்யா பொன்வன்னன் மிகவும் குறிப்பிடத்தக்கவர். பல முன்னனி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கே அம்மாவாகவே மாறிவிட்டார்.அந்த அளவுக்கு நடிப்பில் அசாத்திய திறமையை காட்டியவர் சரண்யா பொன்வன்னன். இவருக்கு இரண்டு மகள்கள். சாந்தினி மற்றும் பிரியதர்ஷினி என்பது தான் அவர்களின் பெயர். இரண்டு பேருமே மருத்துவர்களாம். மேலும் இரண்டு பேருக்குமே திருமணமாகிவிட்டதாம். திருமணமானாலும் சரண்யாவிற்கு இப்படி ஒரு மகள்கள் இருப்பது தெரியாதே என்று தயாரிப்பாளர்கள் புலம்பும் அளவுக்கு மிகவும் அழகாக இருப்பார்களாம்.

saranya
saranya

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.