நண்பர்களிடம் பங்கமாக கலாய் வாங்கிய நடிகை.!எல்லாத்துக்கும் காரணம் இயக்குனர் தானாம்....!

by ராம் சுதன் |
gossip news
X

படத்திற்கு படம் மாறுபட்ட கேரக்டர்களை தேர்வு செய்து வித்தியாசமாக நடித்து வந்தாலும் தற்போது வரை தான் ஒரு சிறந்த நடிகை என்ற பெயருக்காக போராடி கொண்டிருப்பவர் தான் அந்த நடிகை. என்னதான் திறமையான நடிப்பை வெளிப்படுத்தினாலும் ஏனோ தெரியவில்லை அவருக்கென ஒரு நிரந்தரமான இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் நடிகையின் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படத்தின் டீசர் ஒன்று வெளியானது. டீசர் வெளியாகும் முன்பு அப்படி இருக்கும் இப்படி இருக்கும் தயவு செய்து குழந்தைகள் பார்க்க வேண்டாம் என பயங்கர பில்டப் கொடுத்தார்கள்.

ஆனால் படத்தின் டீசரை பார்த்த நடிகையின் சில நண்பர்கள் டீசர் கட்ஸ் என்னவோ நல்லா தான் இருக்கு. ஆனா உன்னை பார்த்தா தான் சிரிப்பு சிரிப்பா வருது என கூறி மிகவும் பங்கமாக கலாய்த்து விட்டார்களாம். அதுமட்டுமின்றி ஏன் அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க மட்டும் உன்னை கூப்பிடறாங்க என்றும் கேட்டுள்ளனர்.

இதனால் நடிகை இயக்குனர் மீது கொல வெறியில் உள்ளாராம். எவ்வளவோ சிறந்த காட்சிகள் இருந்தும் டீசரில் ஏன் தன்னை மொக்கை செய்தார் என மிகுந்த அப்செட்டில் உள்ளாராம் நடிகை.

இருப்பினும் தனது நண்பர்களிடம் படம் வந்தால்தான் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்துள்ளேன் என்பது புரியும். சஸ்பென்ஸ் காரணமாக கூட முக்கியமான விஷயங்களை இயக்குனர் காட்டாமல் இருந்திருக்கலாம் என கூறி சமாளித்து விட்டாராம்.

Next Story