பதற வைக்கவும் தெரியும்.. சிரிக்க வைக்கவும் தெரியும்!.. காமெடியில் இறங்கி கலக்கும் பிரபல வில்லன் நடிகர்கள்!..

by Rohini |
villain_main_cine
X

villain actors

தமிழ் சினிமாவில் ஹீரோ , ஹீரோயின்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவுக்கு காமெடிக்கும் வில்லன் கதாபாத்திரத்திற்கும் பெருமளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதற்கு அந்தக் கால சினிமாவை உதாரணமாக கூறலாம். மூன்று துறைக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டே படங்களை இயக்கியிருக்கின்றனர்.

villain

villain

அது காலப்போக்கில் மாறத் தொடங்கியது. மேலும் வில்லன் கதாபாத்திரத்திற்கே நிலையான நடிகர்கள் இருந்து வந்தனர். ஆனால் காலத்திற்கேற்ப அந்த நிலையும் இப்பொழுது மாறிவருகிறது. அதாவது படத்தின் விளம்பரத்தை அதிகப்படுத்த டாப் ஸ்டார்களாக இருக்கும் நடிகர்களை வில்லனாக நடிக்க வைத்து வில்லன் நடிகர்களுக்கான வாய்ப்புகளை குறைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க : ஐந்து நாட்களில் முழு படத்தையும் முடித்து கொடுத்த ரேவதி.. அது என்ன படம் தெரியுமா?..

அதனால் வில்லன் நடிகர்கள் காமெடி டிராக்கிலும் குணச்சித்திர வேடங்களிலும் தங்கள் கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கின்றனர். அந்த வகையில் காமெடியில் கலக்கும் பிரபல வில்லன் நடிகர்களின் பட்டியலைத்தான் இப்போது பார்க்க போகிறோம்.

மன்சூர் அலிகான்: கேப்டன் பிரபாகரன் படத்தில் அனைவரையும் மிரள வைத்தவர் தான் மன்சூர். முதல் படத்திலேயே வித்தியாசமான தோற்றத்துடன் அனைவரையும் கொலை நடுங்க வைத்தவர். தொடர்ச்சியாக பல படங்களில் வில்லனாக நடித்து பார்ப்பவர்களை அச்சப்பட வைத்தவர். ஆனால் இப்பொழுது ஒரு காமெடி நடிகராகவே மாறியிருக்கிறார். மேலும் இயல்பாகவே அவர் அப்படித்தான் இருக்கிறார்.

villain1

mansoor

ஆனந்த்ராஜ்: முரட்டுத்தனzன முக பாவனை. பார்ப்பவர்களை கதிகலங்க வைக்கும் தோற்றம் என ரசிகர்களை ஒரு காலத்தில் மிரள வைத்தவர் தான் ஆனந்த்ராஜ். பேச்சிலேயே அசர வைக்கும் வசனங்களால் பயப்பட வைத்தவர்.அந்தக் காலத்தில் நம்பியார் எப்படியோ 80களில் ஆனந்த்ராஜ் தமிழ் சினிமாவையே கலக்கிக் கொண்டிருந்தார்.ஆனால் காமெடியில் இறங்கி சர்வ சாதாரணமாக மக்களை சிரிக்கை வைத்து வருகிறார்.

villain2

anandraj

மொட்டை ராஜேந்திரன்: ஃபைட் குரூப்களில் ஒருவராக இருந்து அதன் பின் வில்லனாக அவதரித்து பின்னிக் கொண்டிருந்தவர்மொட்டை ராஜேந்திரன். ஏராளமான படங்களில் வில்லத்தனத்தை காட்டி மிரளவைத்தவர் சமீபகாலமாக நகைச்சுவையில் இறங்கி ரசிகர்களை ரசிக்க வைத்து வருகிறார். ஆனால் சமீபகாலமாக இவர் படங்களில் பார்க்க முடிவதில்லை.

villain3

mottai rajendran

பிரகாஷ்ராஜ்: மூர்க்கத்தனமான நடிப்பை சர்வ சாதாரணமாக வெளிப்படுத்துபவர் பிரகாஷ்ராஜ். இவரின்தோற்றத்தை பார்த்தாலே பயப்படுகிறவர்கள் ஏராளம். அதுவே அவருக்கு கூடுதல் பலமாகவும் இருந்தது. இப்பொழுதும்வில்லனாக நடித்து வந்தாலும் காமெடிக்கும் சூட்டாக கூடிய ஒரு நல்ல நடிகர் தான் பிரகாஷ் ராஜ். அதை வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்திலேயே நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம்.

villain4

prakashraj

Next Story