சீக்கிரமே கல்யாணம்.. சீக்கிரமே விவகாரத்து!.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த திரை பிரபலங்கள்..

நன்றாக பேசி, பழகி, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, காதலித்து திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சுமூகமாக இருக்கும் என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால் காதல் திருமணங்களில் கூட சில சமயங்களில் பிரச்சனைகள் வரும். அப்படி சினிமாவில் ஒன்றாக பணியாற்றிய போது காதலித்து பிறகு திருமணம் செய்து கொண்டு, பின்நாட்களில் மனகசப்பு ஏற்பட்டு விவாகரத்து செய்துகொண்ட சினிமா பிரபலங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தனுஷ்- ஐஸ்வர்யா
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், தமிழில் முன்னனி நடிகர்களுள் ஒருவரான தனுஷும் காதலித்து கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி கடந்த ஆண்டு விவாகரத்து செய்துகொள்வதாக அறிவித்துள்ளனர்.
நாக சைத்தன்யா - சமந்தா
திரையில் பார்க்கவே செம ஜோடியாக இருந்த நாக சைத்தன்யாவும் சமந்தாவும் நிஜத்திலும் ஒன்று சேர்ந்தனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் 4 ஆண்டுகளில் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
செல்வராகவன் - சோனியா அகர்வால்
இயக்குநர் செல்வராகவன் தன்னுடைய படத்தின் ஹீரோயினான சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமான 4 வருடங்களில் இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
ஏ.எல் விஜய் - அமலா பால்

Vijay
இயக்குநர் ஏ எல் விஜய்யும் தன்னுடைய படத்தில் ஹீரோயினான அமலா பாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிறகு 3 ஆண்டுகளில் இவர்கள் விவாகரத்து செய்துகொண்டனர்.
பிரகாஷ் ராஜ் - லலிதா குமாரி
நடிகர் பிரகாஷ் ராஜ் எந்த கேரக்டர் கொடுத்தாலும் மிக அருமையாக நடித்து அசத்திவிடுபவர். இவர் லலிதா குமாரி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவரும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர்கள் திருமணமாகி 16 வருடங்களுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
பார்த்திபன்- சீதா

சீதா பார்த்திபன்
தமிழ் சினிமாவில் இன்று வரை பல வித்யாசமான முயற்ச்சிகளை மேற்கொண்டு வருபவர் பார்த்திபன். இவரும் நடிகை சீதாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 11 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் மன கசப்பால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
ரகுவரன் - ரோகினி

Raghuvaran and Rohini
தமிழ் சினிமாவின் மிக சிறந்த வில்லன் நடிகர் ரகுவரன். இவர் நடிகையை ரோகினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணமாகி 8 வருடங்கள் கழித்து பிரிந்துவிட்டனர்.
ராமராஜன் - நளினி
நடிகர் ராமராஜனும், நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 13 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் பிறகு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
இதையும் படிங்க: வடிவேலு உனக்கு தில் இருந்தா விஜயகாந்துகிட்ட நேர்ல இத கேட்பியா?!.. சவால் விட்ட பொன்னம்பலம்!…