கட்சி ஆரம்பித்து காணாமல் போன நடிகர்கள்... லிஸ்ட் இவ்ளோ பெரிசா இருக்கே!..
தமிழகத்தில் எம்ஜிஆரைப் பார்த்து கட்சியை ஆரம்பித்து பல நடிகர்கள் காணாமல் போய்விட்டனர். அரசியல் ஆசை யாரைத் தான் விட்டது? அப்படி இங்கு சொந்தக் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் 11 பேர். அதில் 9 பேர் அரசியலில் மண்ணைக் கவ்வியுள்ளனர். யார் யார்னு பார்க்கலாமா...
எம்ஜிஆர் - சிவாஜி
திமுக கட்சிக்கு ஆரதரவாக இருந்தவர். அண்ணாவின் மறைவிற்குப் பிறகு கருணாநிதி மேல் ஏற்பட்ட அதிருப்தியால் சொந்தக் கட்சியைத் தொடங்கினார். அதுதான் அதிமுக. இந்தக் கட்சியை 1972ல் ஆரம்பித்தார். அன்று முதல் அவர் இறக்கும் வரை அந்தக் கட்சி வெற்றியை மட்டுமே பார்த்தது.
1989ல் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியைத் தொடங்கினார். இவர் கட்சி ஆரம்பித்தது நம்மில் பலருக்கும் தெரியாது. எந்த வெற்றியும் பெறவில்லை. தற்போது இந்தக் கட்சி இருக்கும் இடம் கூட தெரியாமல் போய்விட்டது.
பாக்கியராஜ் - டி.ராஜேந்தர்
எம்ஜிஆரின் தீவிர ரசிகர் பாக்கியராஜ். 1989ல் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். அதுவும் காணாமல் போனது.
தமிழ்த்திரை உலகில் இவர் ஒரு பன்முகக் கலைஞர். 1991ல் தாயக மறுமலர்ச்சிக் கழகத்தைத் தொடங்கினார். இதுவும் பெரிதாக எந்த வெற்றியையும் பெறவில்லை.
விஜயகாந்த் - சரத்குமார்- கார்த்திக்
2005ல் தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தைத் தொடங்கினார். மிகக் குறுகிய காலத்திலேயே சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் ஆனார். சரியான நேரத்தில் அவரது உடல்நிலை சீராக இருந்து இருந்தால் முதல் அமைச்சராகக் கூட வாய்ப்பு கிடைத்திருக்கும். அவரது உடல்நிலை காரணமாக அவரது கட்சியும் தோல்வி அடைந்தது. அவரும் தற்போது நம்மிடையே இல்லை.
2007ல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை ஆரம்பித்தார். இது அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. தென்காசி தொகுதியில் அவருக்கு பெரிய அளவில் வாக்குகள் கிடைத்தன. இப்போது பாஜகவுடன் இணைந்துள்ளார்.
2009ல் நாடாளும் மக்கள் கட்சியைத் தொடங்கினார். இதற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. குறிப்பிட்ட சாதியை இதில் அடையாளப்படுத்தியதால் அது வீழ்ச்சி அடைந்தது.
கருணாஸ் - மன்சூர் அலிகான்
2011ல் முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியைத் தொடங்கினார். குறிப்பிட்ட சாதி முன்னேற்றத்துக்காகத் தொடங்கிய கட்சி குறிப்பிட்டார். தற்போது அந்தக் கட்சி நிலவரம் குறித்து யாருக்கும் தெரியாது.
2021ல் இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியைத் தொடங்கினார். அந்தக் கட்சி என்ன செய்கிறது என்பதே தெரியவில்லை.
கமல்ஹாசன்
இவர் அரசியலில் இறங்குவார் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. 2018ல் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். பிக்பாஸில் தனக்குக் கிடைத்த ஆதரவை வைத்தே கட்சியைத் தொடங்கியிருப்பார் போல. பிக்பாஸ், அரசியல், சினிமா என 3 விஷயங்களிலும் கால் வைக்க முடியாமல் திணறி வருகிறார். தன்னை ஒரு ஆக்டிவான அரசியல்வாதி என கூறினாலும், வீர வசனம் பேசி திமுகவிடம் சேர்ந்ததால் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை.
விஜய்
தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாக உள்ள விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். 2026ல் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் அதனால் சினிமாவில் இருந்து விலக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவரது அதிரடி அறிவிப்புகளால் அரசியல் களம் எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த விஷயத்தில் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி சொல்லி கடைசியில் பின்வாங்கிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவரது பாடலைப் போலவே எனக்கு கட்சியும் வேணாம், ஒரு கொடியும் வேணாம்னு தன் உடல்நிலையைக் காரணம் காட்டி ஒதுங்கி விட்டார்.