Gossip: தமிழ் சினிமாவில் நம்பருக்கு பெயர் போன நடிகை தன்னுடைய திரை கேரியரை மொத்தமாக தொலைத்து விட்டு குழம்பி போய் நிற்கும் அதிர்ச்சி அப்டேட் வெளியாகி இருக்கிறது.
கோலிவுட்டில் எந்த நடிகையும் கிடைக்காத வரவேற்பை பெற்றவர் நம்பர் நடிகை. அதற்கு காரணம் அந்த நடிகைக்கு ஏகப்பட்ட பிரேக்கப்கள் நடந்து பலரும் அவரை விமர்சித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
இதனால் ஆரம்பத்தில் அவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு இருந்தது. அம்மணி இதை பயன்படுத்திக் கொண்டு தொடர்ச்சியாக தனி படங்களில் நடித்து தனக்கென ஒரு பெரிய இடத்தினை உருவாக்கினார்.
ஆனால் இவருடைய தற்போதைய கணவரும் மூன்றாவது காதலருமான அந்த இயக்குனர் தான் பிரச்சனைக்கு காரண கர்த்தாவாக மாறினார். நம்பர் நடிகை என் காதலர் என்பதால் அவர் கொடுத்த இம்சை பல தயாரிப்பாளர்களுக்கு தலைவலியாக மாறியது.
இதில் ஒரு பெரிய நடிகர் கூட இவருடைய தொல்லையால் பெரிய அளவில் கடுப்பாகி தற்போது அது நீதிமன்றத்தில் வழக்கு வரை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் தற்போது அந்த ட்ரெண்டிங் நடிகரை வைத்து மூன்றெழுத்து படம் ஒன்றை இயக்கி விடுகிறார்.
ஆனால் அப்படி விவாகரமான கதை ஒன்றை வைத்து இருப்பதால் அது வேறு ரிலீசுக்கு பின் சிக்கலாக இருக்கும் என்பது பலருக்கு தலைவலியாக மாறி இருக்கிறது. ஆனால் தற்போது ரிலீசே பிரச்சினையாக இருக்கும் என பேச்சு அடிபட்டு வருகிறது.
ஏனெனில் எப்போதும் போல இயக்குனர் சொன்ன பட்ஜெட்டை தாண்டி பல கோடி செலவை எடுத்து வைத்து விட்டாராம். இதனால் இதற்கு மேல் தன்னால் ஒத்த ரூபா கொடுக்க முடியாது என தயாரிப்பாளர் கை விரித்துவிட்டார். நான் செலவு செய்த பணத்தைக் கொடுத்துவிட்டு படத்தை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என நம்பர் நடிகையிடம் வேறு சொல்லிவிட்டாராம்.
ஆனால் தற்போது அம்மணிக்கே சொல்லும் படம் எதுவும் நகராமல் முரண்டு பிடிக்கிறது. தற்போது அந்த அம்மன் படம் மட்டுமே நகர வாய்ப்பு உண்டு. இதனால் இவ்வளவு பெரிய பட்ஜெட்டை கொடுத்தால் தலையில் துண்டு விழும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
ஒத்த லவ்வ பண்ணிட்டு மொத்த கேரியரையும் காலி பண்ணிட்டோமே என அம்மணியும் பல இடங்களில் புலம்புவதாக சேதி. இந்த படத்துடன் கணவரை அடக்கி வைக்கவும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.