Connect with us

Cinema History

வண்டிக்கு பின்னாடி போய் ட்ரெஸ் மாத்துனாலும் எட்டிக்கிட்டு பார்ப்பாங்க!. நடிகைக்கு நடந்த சோகம்..

சினிமாவில் கதாநாயகர்களுக்கு இருக்குமளவிற்கான வரவேற்பும் வாய்ப்புகளும் கதாநாயகிகளுக்கு அதிகமாக இருப்பதில்லை. இப்போதைய காலக்கட்டத்தில் ஓரளவிற்கு வாய்ப்புகள் உள்ளன என்றாலும் ஆரம்பக்கட்டத்தில் சினிமாவில் நடிகைகளுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இருக்கவில்லை.

விஜயகாந்த், சத்யராஜ் காலக்கட்டத்தில் எல்லாம் சினிமாவில் கேரவான் என்கிற சொகுசு வண்டி முறை இல்லாமல் இருந்தது. இதனால் படப்பிடிப்பு தளங்களில் எங்காவது ஓரமாக குடையை போட்டு அதில்தான் நடிகர்களே அமர்ந்திருப்பார்களாம்.

இதையும் படிங்க: என்ன இருந்தாலும் மருமகன் இல்லையா? தனுஷுக்காக அந்த விஷயத்தில் மறைமுகமாக உதவிய ரஜினி

இந்த காலங்களில் எல்லாம் நடிகைகள் வெகுவாக இதனால் பாதிக்கப்பட்டனர். ஏனெனில் ஆண்களை விடவும் பெண்களுக்கு பொது இடங்களில் உடை மாற்றுவது என்பது கடினமான காரியமாகும். அதிலும் மாதவிடாய் சமயங்களில் படப்பிடிப்பு தளத்தில் சமாளிப்பது அவர்களுக்கு கடினமான காரியமாக இருக்கும்.

ஆரம்பத்தில் இருந்த பிரச்சனை:

சினிமாவில் பல படங்களில் நடித்த பிரபலமான நடிகையான சுலோக்சனா ஒரு பேட்டியில் இந்த பிரச்சனைகள் குறித்து கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது பொதுவாக நடிகைகள் எல்லாம் படப்பிடிப்பு தளத்தில் நான்கு பக்கமும் புடவையை கட்டி அதற்குள்தான் உடை மாற்றுவோம். பயணத்தில் இருக்கும்போது கூட வண்டியை நிறுத்தி காருக்கு பின்னாலேயே உடையை மாற்றிவிட்டு வருவோம்.

இதையும் படிங்க:‘மாவீரன்’ படத்தில் சர்ப்ரைஸ் கதாபாத்திரம்! இந்த நடிகரா? ஒழிச்சு வச்சு வேடிக்கை பார்த்த படக்குழு

ஆனால் அப்படியும் கூட அங்கிருக்கும் நபர்கள் நாங்கள் புடவை மாற்றுவதை பார்ப்பதற்கு முயற்சிப்பார்கள் என கூறியுள்ளார். அந்த அளவிற்கு கதாநாயகிகள் அப்போது கஷ்டங்களை அனுபவித்துள்ளனர் என தனது பேட்டியில் கூறியுள்ளார் சுலோக்‌ஷனா.

இதையும் படிங்க:பெரிய நடிகர் ஒன்னும் கிடையாது! ஆனால் பேய் ஓட்டம் ஓடிய திரைப்படங்கள்

 

google news
Continue Reading

More in Cinema History

To Top