More
Categories: Cinema History Cinema News latest news

ஆல் ஏரியாவிலும் அண்ணன் கில்லிடா!.. பல துறைகளிலும் கலக்கும் நடிகர்களின் லிஸ்ட் இதோ!..

உலக நாயகன் கமல் சகலகலாவல்லவன் என்பது தெரிந்த விஷயம் தான். நடிகர், டான்ஸ் மாஸ்டர், தயாரிப்பாளர், இயக்குனர், கவிஞர், பாடகர், எழுத்தாளர், அரசியல்வாதி என பல துறைகளிலும் செயல்பட்டு வருகிறார். அதே போல பிற நடிகர்களைப் பற்றிப் பார்ப்போம்.

தனுஷ்

Advertising
Advertising

இவரும் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல்துறை வித்தகராக உள்ளார். தமிழ் படங்களில் மட்டும் இல்லாமல் 2 இந்திப் படங்களிலும், 1 ஆங்கிலப் படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார்.

பிரபுதேவா

டான்ஸ் மாஸ்டராக இருந்து பின்னர் நடிகராக மக்கள் மனதில் பதிந்தவர். திடீரென இயக்குனராகி சில வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். இவரது நடனத்துக்கு ஈடு கொடுக்க யாராலும் முடியாது. அதனால் தான் இவரை நடனப்புயல் என்கின்றனர். இவரைப் போலவே ராகவா லாரன்ஸ்சும் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறனுடன் விளங்குகிறார்.

டி.ராஜேந்தர் – சிம்பு

சந்தேகமே வேண்டாம். தந்தை, மகன் இருவருமே ஆல் ரவுண்டர்கள் தான். இருவரும் நடிகர், இயக்குனர். இவர்களில் டி.ஆர். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் என அனைத்துப் பொறுப்புகளையும் கவனித்து பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் அரசியலிலும் குதித்துள்ளார். விஜயகாந்த் நடித்த கூலிக்காரன் படத்திற்கு டி.ராஜேந்தர் இசை அமைத்துள்ளார். சந்தானம் நடித்த சக்க போடு போடு ராஜா படத்திற்கு சிம்பு இசை அமைத்துள்ளார்.

பாக்யராஜ் – பார்த்திபன்

Parthiban

அதே போல நடிகர் பாக்யராஜ், பார்த்திபனையும் எடுத்துக் கொள்ளலாம். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல திறமைகளுக்குச் சொந்தக்காரர். ஆராரோ ஆரிரரோ, இது நம்ம ஆளு, தென்பாண்டிச் சீமையிலே (விஜயகாந்த் நடித்தது) ஆகிய படங்களுக்கு இசை அமைத்தது பாக்யராஜ் தான்.

பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா, பாண்டியராஜன், அமீர், மிஸ்கின், சசிகுமார், வெங்கட்பிரபு, சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிகுமார், பாரதிராஜா, சீமான், மணிவண்ணன்; ஆகியோர் நடிகர் மற்றும் இயக்குனர்களாக உள்ளனர். அதே போல ஜி.வி.பிரகாஷ்குமார், விஜய் ஆண்டனி, ஹிப் ஹாப் தமிழா ஆதி போன்றோர் இசை அமைப்பாளராகவும், நடிகர்களாகவும் உள்ளனர்.

Published by
sankaran v

Recent Posts