அட கோலிவுட்டே இங்க தான் குடியிருக்கு!.. கவின் திருமணத்தில் கலந்து கொண்ட சினிமா பிரபலங்கள்!..

Published on: August 21, 2023
---Advertisement---

நடிகர் கவின் தனது நீண்ட நாள் காதலியான மோனிகாவை இன்று திருமணம் செய்துக் கொண்ட நிலையில்,  கவின் – மோனிகா திருமணத்துக்கு கோலிவுட்டின் இளம் இயக்குநர்கள் மற்றும் ஹீரோயின்கள் என பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.

சிவகார்த்திகேயனை போலவே விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்து இளம் ஹீரோவாக கலக்கி வருகிறார் கவின். கவிலியா என ரசிகர்கள் பிக் பாஸ் சீசன் 3ல் கவின் மற்றும் லாஸ்லியாவின் காதலை கொண்டாடி வந்த நிலையில், கடைசியில் அந்த காதல் லாஸ்லியாவின் அப்பா பிக் பாஸ் வீட்டுக்கு வந்து சென்றதற்கு பிறகு பிரேக்கப் ஆகிவிட்டது.

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக நடந்த டிராமா காதல் தான் அது என்றும் கவின் பல ஆண்டுகளாக  பள்ளியில் வேலை செய்து வரும் மோனிகாவை தான் காதலித்து வந்தார் என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஆகஸ்ட் 20ம் தேதியான இன்று கவின் மற்றும் மோனிகா திருமணம் சொகுசு ரெசார்ட்டில் நடைபெற்ற நிலையில், அதில், இயக்குநர்கள் நெல்சன், மாரி செல்வராஜ், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

முதன் முதலாக விஜய் டிவி புகழ் மணமக்களை வாழ்த்திய புகைப்படம் காலையில் வெளியாகி வைரலான நிலையில், ஜெயிலர் படத்தின் இயக்குநர் நெல்சன் தனது மனைவி மற்றும் மகன் என குடும்பத்துடன் தனது நண்பரான கவின் கல்யாணத்தில் கலந்து கொண்டார். கூடவே டாக்டர், டான், கேப்டன் மில்லர் படங்களின் நாயகி பிரியங்கா மோகனும் திருமணத்தில் கலந்துக் கொண்ட போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

மாமன்னன் பட இயக்குநர் மாரி செல்வராஜ், நயன்தாரா இல்லாமல் சோலோவாக வந்த விக்னேஷ் சிவன் என கவினின் திருமணமே களைகட்டியது. மேலும், பல சினிமா பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர் என்றும் திருமண புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருவதாக கூறுகின்றனர். நடிகர் கவினுக்கு இவ்வளவு விரைவில் திருமணம் ஆனது ரசிகைகளுக்கு வருத்தம் தான் என்றாலும், ரசிகர்கள் பலரும் கவின் மற்றும் மோனிகா தம்பதியினரை வாழ்த்தி வருகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.