கடைசி நேரத்தில் கல்யாணத்தை நிறுத்திய தமிழ் சினிமா பிரபலங்கள்- அடேங்கப்பா லிஸ்ட்டு பெருசா போகுதே…

சினிமா பிரபலங்கள் திருமணம் செய்துகொள்வது, விவாகரத்து செய்துகொள்வது எல்லாமே தலைப்பு செய்தி தான். அதைவிட, பிரபலங்கள் திருமணம் செய்துகொள்வதாக அறிவித்துவிட்டு, பிறகு பிரேக் அப் செய்தால், அல்லது நிச்சயதார்த்தம் செய்துவிட்டு, திருமணத்தை நிறுத்தினால், அது முக்கிய செய்தி தான். அடுத்த ஒரு வாரத்திற்கு ரசிகர்கள் அதை பற்றி தான் பேசுவார்கள். அப்படி நிச்சயதார்த்தம் செய்துகொண்ட பிறகு திருமணத்தை நிறுத்திய 5 சினிமா பிரபலங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
விஷால்
நடிகர் விஷாலுக்கு 2020ம் ஆண்டு அனிஷா என்ற பெண்ணுடன் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பல ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்ளாமல் இருந்த விஷால் ஒரு வழியாக திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 மாதங்களுக்கு பிறகு அவர்களின் திருமணம் நின்றுவிட்டதாக செய்திகள் வெளியானது.
த்ரிஷா
நடிகை த்ரிஷாவுக்கு கடந்த 2015ம் ஆண்டு தொழிலதிபரான வருண் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் த்ரிஷா கல்யாணத்திற்கு பிறகு நடிக்கக் கூடாது என்று வருண் கூறியதால், அந்த கல்யாணத்தை நடிகை த்ரிஷா நிறுத்திவிட்டார்.
ஆர்.கே.சுரேஷ்- திவ்யா கணேஷ்
தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷும், சீரியல் நடிகையான திவ்யா கணேஷ் என்பவரும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தனர். அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக செய்திகள் வெளியாகின. அதன் பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் திருமணத்தை நிறுத்திவிட்டனர்.
ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய முதல் படத்தில் நடித்த ஹீரோவான ரக்ஷித் ஷெட்டி என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். கடந்த 2017ம் ஆண்டு இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதன் பிறகு சில மாதங்களிலேயே இவர்கள் திருமணத்தை நிறுத்திவிட்டனர்.
அகில் அக்கினேனி
பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி. இவரும் ஒருசில படங்களில் நடித்துள்ளார். நடிகர் அகில் அக்கினேனிக்கும் ஸ்ரேயா என்ற பெண்ணும் வெகு விமர்சையாக கடந்த 2017ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் திருமணத்திற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு திருமணத்திற்கு யாரும் வரவேண்டாம். கல்யாணம் நின்றுவிட்டது என நடிகர் நாகார்ஜுனா அறிவித்துவிட்டார்.