தமிழ் சினிமா ஒரு காலத்தில் தயாரிப்பாளர்கள், கதாசிரியர்கள் கைவசம் இருந்தது. அப்போது, கதையை தயாரிப்பாளர்கேட்பார் . பிறகு அதற்கு தகுந்த இயக்குனர்கள்இருப்பார்கள். பிறகு தான் ஹீரோ எனும் வட்டத்திற்குள் வருவார்கள்.
அந்த சமயம் தான் தமிழ் சினிமாவின் பொற்காலம் என பலரும் கூறுவார்கள். ஏனென்றால் பல்வேறு நல்ல கதைக்களங்கள் கொண்டதிரைபடங்கள் வரும். அப்போது தயாரிப்பாளர் கூறும் பட்ஜெட்டில், தயாரிப்பாளர் கூறும் காலநேரத்தில் படத்தை கொடுத்து ஹிட் கொடுத்துவிடுவார்கள். அப்படிப்பட்ட இயக்குனர்கள் தொடர்ந்து அந்த தயாரிப்பாளர் வசம் இருப்பார்கள்.
அவர்களில் ஒருசிலர் நாம் இப்போது பார்க்கலாம். அதில் என்றும் முதன்மையானவர் கே.எஸ்.ரவிக்குமார் தான். அவர் கொடுத்த நேரத்திற்குள்ளாகவே, கொடுத்த பட்ஜெட்டிற்குள் படத்தை கொடுத்து பல மெகா ஹிட்களை கொடுத்துள்ளார். படையப்பா படத்தையே லட்சக்கணக்கில் மிச்சம் வைத்து, அதனை திருப்பி கொடுத்தவர் கமர்சியல் கிங் கே.எஸ்.ரவிக்குமார்.
அடுத்து இயக்குனர் விக்ரமன். இவரை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குனர் என்றே கூறலாம். அந்தளவுக்கு பல்வேறு ஹிட் படஙக்ளை சூப்பர் ஹிட் படங்களை அந்நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார்.
தற்காலத்து கே.எஸ்.ரவிக்குமார் என தயாரிப்பாளர்கள் செல்லமாக குறிப்பிடும் நபர் என்றால் அது, இயக்குனர் ஹரி தான். இவருடைய படங்களை பார்த்தாலே தெரியும். இவர் படம் என்றால் நம்பி தியேட்டர்செல்லலாம் . நல்ல குடும்ப கதைக்களம். அதில் கமர்சியல் அம்சங்கள் என எப்போதும் ஏமாற்றியதில்லை என்றே கூறலாம்.( சிங்கம் அடுத்தடுத்த பாகங்கள், சாமி இரண்டாம் பாகத்தை தவிர்த்து)
இதையும் படியுங்களேன் – விஜய் சார் அந்த விஷயத்தை வெளிப்படையாக சொன்னார்.! நம்ம கேப்டன் செஞ்ச வேலை வேற மாறி…
தற்போது அந்த லிஸ்டில் லேட்டஸ்ட்டாக இணைந்தது சிறுத்தை சிவா. இவரது படங்கள், ரசிகர்கள் ரசிக்கும் அம்சங்கள் நிறைந்து இருக்கும். இடையில் விவேகம் என பாதை மாறி சறுக்கினாலும், மீண்டும் அதே தயாரிப்பாளருக்கு விஸ்வாசம் என பழைய பாணியில் மெகா ஹிட் கொடுத்து விசுவாசமாய் நிற்கிறார் சிறுத்தை சிவா. அண்ணாத்த கைவிட்டாலும், சிங்கம் சூர்யா கைவிடாமல், அடுத்த படத்தை இயக்கும் பொறுப்பை நம்பி கொடுத்துள்ளார்.
இது போக, இயக்குனர் பாண்டிராஜ், சுசீந்திரன் போன்றோரும் அவ்வப்போது லிஸ்டில் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகன் படத்தின்…
டான் பிக்சர்ஸ்…
விஜயின் ஜனநாயகன்…
ஜனநாயகன் படத்தின்…
நடிகர் விஜய்…